கடும் பீதியில் திமுக… SIR வெச்ச ஆப்பு… இப்ப தெரிகிறதா திமுக எப்படி வெற்றி பெற்றது என்று.?

0
Follow on Google News

SIR குறித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடத்தி வரும் திமுக அரசின் செயல் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைத்துள்ளது என்கிற விமர்சனம் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக சிறுபாண்மை மக்களை குறிவைத்து இந்த SIR செயல்முறை உள்ளது என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டு உமைக்கு புறம்பானது என்றும், SIR ஒரு வழக்கமான ஒன்று தான் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கு முன்பு கடந்த காலங்களின் நடந்த SIR சீர்திருத்த பனியின் போதெல்லாம் அமைதியாக இருந்து, அதன் மூலம் பலன் அடைந்த திமுக , மத்திய பாஜக அரசை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே, SIR குறித்து தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள் என பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

SIR என்பது ஜனநாயகத்துக்கு எதிராக தற்பொழுது தான் புதுசா கொண்டு வந்த ஒன்றெல்ல, இது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான ஒரு வழிமுறை தன, இறந்த வாக்காளர்கள் பெயரை நீக்குவது, வாக்காளர்களின் நகல்கள் சரியாக உள்ளதா என உறுதி படுத்துவது, மேலும் முகவரி மாற்றம் செய்யப்பட்டால் , முகவரியை புதுப்பிப்பது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது, குறிப்பாக முதல் வாக்காளர்களான இலைஞர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பது.

போலி வாக்காளர்களை அடையாள காணப்பட்டு நீக்குவது, இப்படி முறைகேடு இல்லாமல், ஜனநாயக முறைப்படி துல்லியமாக வாக்காளர் பட்டியலை சரி செய்வது, இது தான் SIR ,இது தமிழகம் மட்டுமில்லாமல் , இந்தியா முளுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் SIR என்கிற பெயரை கேட்டாலே ஏன் திமுகவுக்கு அச்சம் என அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்நிலையில் திமுக நம்பி இருக்கும் போலி வாக்காளர்கள் பறிபோய்விடும் என்கிற அச்சம் தான் திமுக SIR யை எதிர்கிறதா.? என பாஜகவினர் திமுகவை நோக்கி கேள்வி எழுப்பி வரும் நிலையில், கடந்த காலங்களின் திமுக வெற்றிக்கு காரணமாக இறந்தவர்களின் வாக்குகள் வாக்களிக்கப்பட்டது தான் காரணம் என பகிரங்கமாக குற்றசாட்டுகளை தெரிவிக்கும் பாஜக, தற்பொழுது அந்த இறந்தவர்கள் வாக்குகள் பறிபோக போகிறது என்கிற அச்சம் தான் திமுகவை கதி கலங்க செய்து SIR எதிராக கூச்சலிட வைத்துள்ளது என்கிறார்கள் பாஜகவினர்.

இந்நிலையில் எந்த ஒரு ஆதாரங்கள் இல்லாமல் திமுக, SIR க்கு எதிராக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், SIR சீர் திருத்தத்தால் பெருமளவு வாக்குகளை நீக்கப்படுவதாக மக்கள் மத்தியில் ஒரு பதற்றத்தை உருவாக்கும் வகையில் , திமுக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதாக கருத்துக்கள் வெளியாகியுள்ளது.

ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் , பூஜ்யம் போலி வாக்காளர்கள் என்கிற நிலையை உருவாக்கி ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் முயற்சி தான் தற்பொழுது நடைமுறையில் உள்ள SIR , குறிப்பாக வெளிப்படையான வாக்காளர் பட்டியல், எப்படி ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கும் என்பதற்கு, SIR குறித்து எதிராக பேசும் திமுகவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

குறிப்பாக திமுக SIR க்கு எதிரான போராட்டம் வாக்காளர்களை பாதுகாப்பதற்கான நோக்கம் இல்லை, போலி வாக்காளர்களை பாதுகாப்பது தான் திமுகவின் நோக்கம் என்றும், அதாவது திமுகவின் அரசியல் லாபத்திற்காக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் SIR க்கு எதிராக கூச்சலிட்டு வருகிறது என்கிற விமர்சனமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.