தனித்து விடப்பட்ட விஜய்… ஆதவா அர்ஜுனாவை நம்பி மோசம் போன பரிதாபம்… போச்சா சோனமுத்தா…

0
Follow on Google News

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், புதியதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், தனித்து போட்டியிட தைரியம் இல்லாமல், கூட்டணிக்காக கதவுகளை நான்கு பக்கமும் திறந்து வைத்து, ஆட்சியில் பங்கு தருகிறோம், அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என கூவி கூவி கூப்பிட்டாலும், இதுவரை ஒரு கட்சியும் விஜய் உடன் கூட்டணி அமைக்க முன் வரவில்லை.

அதே நேரத்தில், கடந்த 2005 ம் ஆண்டு தேமுதிக என்கிற கட்சியை தொடங்கிய விஜயகாந்த் , அடுத்த ஒரு வருடத்தில் 2006ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், அதிமுக உடனும் கூட்டணி இல்லை திமுக உடனும் கூட்டணி இல்லை, ஆடவனுடன், மக்களுடன் தான் கூட்டணி என , தமிழகம் முழுவதும் 234 தொகுதியில் விஜயகாந்த் தனித்து போட்டியிட்டது போன்று, யாருடனும் கூட்டணி இல்லை என சொல்வதற்கு விஜய்க்கு தைரியம் இல்லை.

ஒரு பக்கம் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வாங்க என்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, மறுபக்கம் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வாங்க என அதிமுக உடன் பேச்சுவார்த்தை, அது மட்டுமின்றி சிறு சிறு கட்சிகளுடன் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் விஜய்க்கு எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு விஜய்க்கு அழைப்பு வந்தும்.

விஜய் கூட இருக்கும் அதாவ அர்ஜுனா போன்றோர், காங்கிரஸ் நம்மிடம் கூட்டணிக்கு வந்து விடுவார்கள், சற்று பொறுமையாக இருங்கள் என உசுப்பேத்தி விட்டு, SIR க்கு எதிராக விஜய்யை அறிக்கை விட வைத்து இருக்கிறார்கள். அனால் காங்கிரஸ் விஜய்யை பகடை காயாக பயன்படுத்தி திமுகவிடம் , விஜய் கூட்டணிக்கு சென்று விடுவோம் என அதிக தொகுதியை பெறலாம் என்கிற திட்டத்தில் இருந்தது.

மறுப்பக்கம் விஜய் உடன் கூட்டணி அமைத்தால், கேரளாவில் காங்கிரஸ் வெற்றி நாம் கேரளா முதலைவராகி விடலாம் என கே சி வேணுகோபால், விஜய் உடன் கூட்டணிக்காக ராகுல் காந்தியிடம் பேசி வந்தார், மேலும் திமுக மீது அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் போன்றோர், கே சி வேணுகோபாலுக்கு ஆதரவாக விஜய் உடன் கூட்டணி வைப்பது தான் சரி என ராகுல்காந்தியிடம் பேசி வந்தார்கள்.

இப்படி ஒரு சூழலில் திமுக – காங்கிரஸ் இடையே கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செய்திகள் வெளியானது, இருந்தும் கை நம்மை விட்டு செல்லாது என உதயநிதி பகிரங்கமாக மேடையில் பேசினார், ஆனால் திருச்சி வேலுச்சாமி போன்றோர் திமுகவை கடுமையாக பேசி வந்தனர், இப்படி ஒரு சுழலில் பீகார் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடியை கொடுத்தது.

பீகார் தேர்தல் முடிவுக்கு பின்பு திமுக தரப்பில் இருந்து காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு ஒரு தகவல் சென்று இருக்கிறது, கூட்டணியில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்று உங்களுக்கு எண்ணம் இருந்தால் தாராளமாக வெளியே போங்க, அதை தவிர்த்து திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் நிர்வாகிகளை பேச வைத்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என திமுக தரப்பில் காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து டெல்லி காங்கிரஸ் தலைமை, திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, கூட்டணி தொடரும் இனி யாரும் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேச கூடாது என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்பொழுது விஜய் நிலை தான் பரிதாபத்தில் உள்ளது .