தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. இதில் ஏற்கனேவே திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு நாங்கள் கொடுப்பது தான் சீட் , இஷ்டம் இருந்தால் இருங்க இல்லை என்றால் வெளியேறுங்க என்கிற முடிவுக்கு வந்த திமுக மேலும் கூட்டணியில் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த தேமுதிக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எங்களுக்கு ராஜசபா சீட் தருவதாக தெரிவித்து விட்டு, தராமல் அதிமுக ஏமாற்றி விட்டது என குற்றம் சுமத்தி அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறி தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணியை உறுதி செய்வோம் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

இந்த நிலையில் மீண்டும் அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பிரேமலதா, இல்லை விஜய் உடன் கூட்டணிக்கு செல்ல இருக்கிறார், இல்லை திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என தொடர்ந்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் வகையில் அமைத்துள்ளது பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி.
பிரேமலதா, தேர்தல் ஆணையத்தின் SIR (Special Intensive Revision) திருத்தப் பணியைப் பற்றி எச்சரித்தார். மேலும் “SIR திருத்தத்தில் உங்கள் வாக்குகளை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பல்வேறு திருட்டுக்கள் போல வாக்குகளைத் திருட வருகிறார்கள். உங்கள் வாக்குகள் மட்டுமல்ல, குடும்பத்தினரின் வாக்குகளையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள் என SIR க்கு எதிராக பிரேமலதா பேசியது பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவு படுத்தி விட்டது.
மேலும் மேலும், “நன்றி மறந்தவர்களுக்கும், துரோகம் செய்தவர்களுக்கும் பாடம் புகட்டுவோம் என பிரேமலதா பேசியது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைக்க அனைத்து கட்சிகளும் தயங்கிய நிலையில் தேமுதிக கூட்டணி அமைத்தது, அந்த நன்றியை மறந்து, ராஜசபா சீட் தருகிறோம் என ஏமாற்றி துரோகம் செய்த அதிமுக உடனும் கூட்டணி இல்லை என்பதை மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார் பிரேமலதா.
இதனை தொடர்ந்து விஜய் குறித்து மறைமுகமாக பேசிய பிரேமலதா, ‘யாரும் இங்கே எடுத்தவுடனேயே வந்து விட முடியாது. நேற்று முளைத்த காளான்லாம் இங்கே எடுபடாது. அது ஒரு நாள் மழைக்கே தாங்காது என விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசியது விஜய் உடனும் கூட்டணி இல்லை என்பதை தெளிவு படுத்தி விட்டார் பிரேமலதா விஜயகாந்த். இந்நிலையில் திமுக உடன் தேமுதிக கூட்டணி உறுதியாகி விட்டது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டசபை தொகுதியில் அதிக வாக்குகளை பெற்று இருந்தார், அதன் அடிப்படையில் திமுக கூட்டணியில் இடம் பெற இருக்கும் தேமுதிக வரும் 2026 சட்டசபை தேர்தலில், திருமங்கலம் தொகுதியில் விஜயபிரபாகரனை களம் இறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் அதிமுக சீட்டின் எம் எல் ஏ முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எதிராக திமுக கூட்டணி கட்சிகள் பலத்துடன் வரும் சட்டசபை தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார் என்பது உறுதியாகி உள்ளது என்கிறது நம்பக தகுந்த வட்டாரங்கள்.

