70 தொகுதி, துணை முதல்வர், 5 அமைச்சர்…. விஜய் வைத்த டிமாண்ட்… NDA கூட்டணிக்கு ஓகே சொன்ன விஜய்…

0
Follow on Google News

கொள்கை எதிரி பாஜக , அரசியல் எதிரி திமுக என ஒரே நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுகவை எதிர்த்து தன்னுடைய அரசியலை தொடங்கிய விஜய் நிலைமை தற்பொழுது ஏதாவது ஒரு எதிரியிடம் நண்பராக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் , சினிமா மோகத்தில் வரும் கூட்டத்தை வைத்து அரசியலில் வெற்றி பெற முடியாது என்று சமிபதில் நடந்த கரூர் சம்பவம் விஜய்க்கு உணர்த்தியது, மேலும் தனக்கு கூடிய கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் அடைந்த தோல்வி விஜய்க்கு உணர்த்தி இருக்கிறது.

அந்த வகையில் சினிமா துறையில் இருந்து வந்த எம்ஜிஆர் முதல்வராக அரியணை ஏறினார் என்றால், அவர் கட்சி தொடங்கி 7 வருடம் கழித்து தான் முதல்வராக அரியணை ஏற முடிந்தது, மேலும் அவர் சினிமாவில் இருந்து நேரடியாக வந்து விஜய் போன்று அரசியல் கட்சி தொடங்கவில்லை, திமுகவில் மிக உயரிய பதவியான பொருளாளர் பதவியில் இருந்தவர், மேலும் திமுக வெற்றிக்கு தீவிரமாக தேர்தல் களத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர், அந்த வகையில் அரசியல் அனுபவமிக்கவர் எம்ஜிஆர் கட்சி தொடங்கி ஆட்சியை பிடிக்க சுமார் 7 வருடம் ஆனது என்றால் விஜய் நிலைமை.

மேலும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்த்த விஜய்க்கு ஏமாற்றமே மிஞ்சும் வகையில் பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பின்பு, திமுக கூட்டணியில் கொடுக்கும் தொகுதியை பெற்று கொண்டு போட்டியிடுவோம் என்கிற முடிவுக்கு வந்த காங்கிரஸ், விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை இனி தொடரவேண்டாம் என கதவை மூடிவிட்டது.

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என விஜய் கூவி கூவி கூட்டணிக்கு அழைத்தாலும், நீ ஆட்சிக்கு வந்தா தான எங்களுக்கு உன்னால பங்கு தரமுடியும் என்கிற அரசியல் எதார்த்தத்தை புரிந்து கொண்டு எந்த கட்சியும் விஜய்யிடம் கூட்டணிக்கு செல்ல முன் வரவில்லை. இருந்தாலும் தனித்து போட்டியிடலாம் என விஜய் திட்டமிட்ட பொது, 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட செல்வாக்கு மிக்க வேட்பாளரை எங்கே தேடி பிடிப்பது என்கிற பிரச்சனை விஜய்க்கு உண்டு.

அந்த வகையில் தனித்து போட்டியிடும் முடிவையும் கைவிட்ட விஜய், தற்பொழுது அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு , விஜய்யின் கொள்கை எதிரியான பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தான் என்கிற சூழல் உருவாகி இருக்கிறது. மேலும் தற்பொழுது விஜய்யின் முதல் இலக்கு திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதாகும், அப்படி இருக்கையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும், 2031ம் ஆண்டு தனித்து தன்னுடைய தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஆட்சியில் அமர வேண்டும் என்கிற இறுதி முடிவை எடுத்து இருக்கிறார் விஜய்.

மேலும் திமுக கொடுக்கும் அரசியல் ரீதியான எதிர்ப்புகளை எதிர்கொள்ள தற்பொழுது விஜய்க்கு பாஜக துணையும் தேவை படுகிறது. மேலும் பாஜகவுக்கு தமிழகத்தில் திமுகவை வீழ்த்த விஜய்யின் செல்வாக்கு தேவை படுகிறது, இதனால் தொடர்ந்து விஜய்யை தன்பக்கம் இழுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது பாஜக. தற்பொழுது அந்த முயற்சிக்கு பலன் அளிக்கும் வகையில் விஜய்யும் கூட்டணிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட தங்கள் கட்சிக்கு 70 தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஆட்சி அமையும் போது, துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும், மேலும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு 5 அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும், அதில் இரண்டு முக்கிய இலாகா வேண்டும் என பல டிமாண்ட் களை விஜய் வைத்துள்ளது அதிமுக தலைமையை ஆட்டம் கான வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.