முக்குடைபட்ட விஜய்… ஸ்டிட்டா சொன்ன ராகுல் காந்தி… இதுக்கு மேல அவமானப்படுத்த முடியாது…

0
Follow on Google News

எங்கள் அரசியல் எதிரி திமுக , கொள்கை எதிரி பாஜக என ஒரே நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் எதிர்த்து பேசி வந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், கரூர் துயர சம்பவத்துக்கு பின்பு பாஜகவை விமர்சனம் செய்வதை குறைத்து கொண்டு திமுகவை கடுமையாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

குறிப்பாக விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய பின்பு ஜனநாயக படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார், கட்சி சார்ந்த முடிவுகளை ஆதவா அர்ஜுனா , ஜான் ஆரோக்கிய சாமி ஆகிய இருவரும் தான் எடுத்து வருகிறார்கள். இதில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை உப்புக்கு சப்பாக கூடவே வைத்து கொள்கிறார்கள் என்றே கூறப்படுகிறது.

அந்த வகையில் விஜயை பின்னின்று இயக்குவது முழுக்க முழுக்க ஆதவா அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கிய சாமி ஆகியோர் தான் என கூறப்படுகிறது. அந்த வகையில் விடுதலை சிறுத்தை கட்சியில் அதாவ அர்ஜுனா இருந்த போது , கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலாக விசிக வுக்கு ஒரு தொகுதி பெற்று அதில் அதாவ அர்ஜுனா போட்டியிட திட்டமிட்டு இருந்தார், ஆனால் அதற்கு திமுக வழியில்லாமல் எப்போதும் போல் ஒரு சீட் மட்டுமே விசிகாவுக்கு கொடுத்தது, இதை மனதில் வைத்து தனக்கு இருக்கும் திமுக மீது உள்ள பழைய பகையை விஜய் மூலம் தீர்த்து வருகிறார் ஆதவா அர்ஜுனா.

அதே போன்று ஜான் ஆரோக்கிய சாமி பாஜக எதிர்ப்பு கொள்கையை கொண்டவர், அவரும் தனக்கு இருக்கும் பாஜக மீது உள்ள வெறுப்பை விஜய் மீது தீர்த்து வருகிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கியதுமே அவருடன் கூட்டணிக்காக பாஜக பேச்சுவார்த்தைக்கு முயற்சித்துள்ளது.ஆனால் பாஜக உடன் கூட்டணி செல்ல வேண்டாம், காங்கிரஸ் கட்சியை நம்முடன் கூட்டணிக்கு கொண்டு வருகிறோம், காங்கிரஸ் கட்சி வந்தால் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தை என திமுக கூட்டணியில் இருக்கும் அணைத்து கட்சிகளும் நம்முடன் கூட்டணி வருவார்கள் என விஜய்க்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறார்கள் ஜான் ஆரோக்கிய சாமி, மற்றும் ஆதவா அர்ஜுனா இருவரும்.

இந்நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணிக்கு செல்வதற்கு முன்பு விஜய் உடன் கூட்டணி தொடர்பாக அதிமுக பேசின் இருக்கிறது, அதற்கு ஆதவா அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கிய சாமி இருவரும் அவசர பட வேண்டாம் தேர்தல் நெருக்கட்டும் பார்க்கலாம் என்று தெரிவிக்க, விஜய்யும் அதே பதிலை தெரிவிக்க, அதிமுக விஜய்க்கு குட் பை சொல்லிவிட்டு பாஜக உடன் கூட்டணி அமைத்து கொண்டது.

இந்நிலையில் கரூர் துயர சம்பவத்துக்கு பின்பு பாஜக மீண்டும் விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது. அதே நேரத்தில் கரூர் சம்பவம் குறித்து ராகுல் காந்தியும் விஜய்யை தொடர்பு கொண்டு நட்பு என்கிற முறையில் கரூர் சம்பவம் குறித்து தூக்கம் விசாரித்தார், ஆனால் கூட்டணி குறித்து பேசவில்லை. இருந்தும் தொடர்ந்து த வெ க தரப்பில் தொடர்ந்து ராகுல் காந்தியிடம் கூட்டணி குறித்து பேசி வந்துள்ளார்கள், ஆனால் அவர் திமுக உடன் கூட்டணி என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் பிரியங்கா காந்தியை அப்ப்ரோச் செய்துள்ளது ஆதவா அர்ஜுன் தரப்பு, அதற்கு அவர் ராகுல் காந்தியிடம் பேசுங்க என தெரிவிக்க, மீண்டும் ராகுல் காந்தியிடம் ஆதவா அர்ஜுனா தரப்பு பேச, உங்களுக்கு எத்தனை தடவை சொல்வது நாங்கள் திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம், எங்கள் கூட்டணிக்குள் குழம்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இனிமேல் கூட்டணி குறித்து எங்கள் கதவை தட்ட வேண்டாம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல், விஜய்க்கு முக்குடைப்பு சம்பவமாக அமைத்துள்ளது.