இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தங்கர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி புதிய துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறது. இதற்கான பாஜகவின் ஆலோசனை கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் துணை ஜனாதிபதியாக குஜராத் ஆளுநரான ஆசாரியா தேவரத் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரார் ஆசாரியா தேவரத் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த தினம் வர இருக்கிறது, பிரதமர் மோடியின் பிறந்த தினத்திற்கு முன்பு அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்ந்தெடுத்த பின்பு, இந்த இடைப்பட்ட ஒரு மாதத்திற்குள் அரசியலில் பல மாற்றங்கள் நிகழ இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

குறிப்பாக அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் நிகழ இருக்கிறது, சில மாநில கவர்னர்கள் மாற்றங்கள் நிகழ இருக்கிறது, தேசிய பாஜகவின் தேசிய தலைவர் மற்றும் தேசிய நிர்வாகிகள் ஆகியோர் இந்த இடைப்பட்ட ஒரு மாதத்திற்குள் அறிவிக்க இருக்கிறார்கள். பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு முன்பே இந்த அரசியல் மாற்றங்கள் நிகழ இருக்கிறது என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவையில் தொடர்ந்து 5 முதல் 7 வருடங்களுக்கு மேலாக இருக்கின்ற வயதானவர்களுக்கு ஓய்வு கொடுத்து, புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது, அதற்கான வேலைகள் தற்போது இருந்தே தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகிறது.
இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் யார்.? மேலும் தேசிய நிர்வாகிகள் யார் .? என்பதை அமித்ஷா – மோடி – ஜெபி நட்டா ஆகிய மூவருமே உறுதி செய்து விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் மற்றும் தேசிய நிர்வாக பட்டியலை அமித்ஷா – மோடி – ஜேபி நட்டா ஆகியோர் ஏற்கனவே முடிவு செய்திருந்த நிலையில், பகல்காம் தாக்குதல் மற்றும் ஏர் இந்தியா விமான விபத்து ஆகியவற்றின் காரணமாக அறிவிப்பு வெளிவதில் தடையானது.
இந்த நிலையில் அடுத்த 10 வருடங்களை இலக்காக வைத்து, மேலும் வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரமாக வேலை செய்யக்கூடிய வகையில், வயது குறைந்த ஒருவரை தேசிய தலைவராக நியமிக்க ஜேபி நட்டா – மோடி – அமித்ஷா ஆகியோர் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலர் பெயர் தேசிய தலைவர்கள் பரிசைலனையில் இருந்த நிலையில் அவர்களுக்கு வயது காரணமாக வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் 56 வயதான முபேந்திர யாதவ் பாஜகவின் தேசிய தலைவராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா, ஜெ பி நட்டா ஆகியோர் முபேந்திர யாதவை தேசிய தலைவராக நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் அமித்சா ஆகியோரின் நம்பிக்கை கூறியவராகவும் கூறியவராகவும் இருந்து வரும் முன்னால் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிறது.
மேலும் பாஜக தேசிய தலைவர் மற்றும் தேசிய நிர்வாகிகள் பட்டியலை பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் உறுதி செய்து விட்டதாகவும் துணை ஜனாதிபதி தேர்தல் முடிந்து புதிய துணை ஜனாதிபதி தேர்வு செய்யப்பட்ட பின்பு தேசிய தலைவர் மற்றும் தேசிய நிர்வாகி பட்டியல் வெளியாகும் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

