விஜய்யை உண்மையாகவே காதலித்தேன்… பிரேக் ஆப் ஆனது எப்படி… போட்டுடைத்த வனிதா விஜயகுமார்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகி என்றால் அது நடிகை வனிதா விஜயகுமார்தான். 3 திருமணங்கள் செய்து 3 கணவர்களையும் விவாகரத்து செய்துவிட்டு இப்போது முரட்டு சிங்களாக தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் இளையராஜாவுக்கும் இவருக்கும் ஏற்பட்ட மோதல் இணையத்தில் பெரிய அளவில் வைரலானது.

கடந்த 1995ம் ஆண்டில் வெளியான சந்திரலேகா என்ற படத்தில் வனிதா விஜயகுமார் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவர் கதாநாயகியாக நடித்த நிலையில் ஹீரோவாக நடிகர் விஜய் நடித்திருந்தார். முதல் படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஒரு நல்ல வாய்ப்பை பெற்றவர் நடிகை வனிதா விஜயகுமார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இளம் வயது விஜய் மற்றும் வனிதா ஜோடி அந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் தொடர்ந்து மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த வனிதா விஜயகுமார் பிறகு பல சர்ச்சைகளில் சிக்கினார். சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் வனிதா விஜயகுமார் இணைந்து ஜோடியாக நடித்த படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவராத்திரி பாடலை, இந்த படத்தில் பயன்படுத்திய விவகாரத்தில்தான் இளையராஜா, வனிதா விஜயகுமாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், நான் இளையராஜா வீட்டுக்கு மருமகளா போயிருக்க வேண்டியவ என்ற பெரிய அணுகுண்டை தூக்கிப் போட்டு வனிதா பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை வினிதா விஜயகுமார், அவரது முதல் படமான சந்திரலேகா படம் குறித்த சில விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், சந்திரலேகா படப்பிடிப்பு நடந்தபோது நடிகர் விஜய்யை நான் உண்மையாகவே காதலித்தேன். அந்த படத்தில் இடம்பெற்ற சில காதல் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கும்.

அதற்கு காரணம் என்னவென்றால் அந்த படத்தில் நான் நடித்த போது தத்ரூபமாக அந்த காட்சிகளில் நடிப்பதற்கு உண்மையாகவே படத்தின் நாயகன் விஜயை காதலிப்பதாக மனதார உணர்ந்து நடித்தேன். எங்க அம்மா இந்த படத்தில் கதாநாயகியாக தான் என்னை நடிக்க சொன்னாங்க. ஆனால் நான் காதல் காட்சிகளில் உண்மையாகவே விஜய் மீது காதல் உணர்வுடன் கட்டிப்பிடித்து உண்மையாக நடித்தேன் என்று வனிதா விஜயகுமார் பேசியொருந்தார்.

ஒரு படத்தில் நடிக்கும் போது நாயகி, கதாபாத்திரத்துக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்பதற்கு வனிதா விஜயகுமார் ஒரு உதாரணமாக சந்திரலேகா படத்தில் நடித்திருக்கிறார். திரையில் காதல் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த வனிதா இப்படி ஆழமான ஈடுபாடுடன் நடித்திருக்கிறார்.

சந்திரலேகா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்த பின்பும் அந்தப் படத்தின் காதல் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுவதற்கு வனிதா அன்று வெளிப்படுத்திய இந்த உண்மையான காதல் உணர்வு முக்கியமான காரணமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் அவரது நடிப்பை பாராட்டுகின்றனர். ஆனால் வனிதாவின் நிஜமான காதல் உணர்வில் அன்றைய இளம் நடிகர் விஜய் சிக்காமல் தப்பித்தாரே, அதுதான் பெரிய விஷயம் என்றும் ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.