சுற்றி வளைக்கப்பட்ட பெரியகருப்பன் ஆட்கள்… தவெக வேட்பாளருக்கு அரணாக நின்ற திருமாறன் ஜி… நுனியிலையில் தப்பித்த பரபரப்பு…

0
Follow on Google News

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை கடைசி நிமிடம் வரை உச்சகட்ட பரபரப்பில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் மற்றும் திமுக வேட்பாளர் இருவருக்கும் இடையிலான போட்டி மிக கடுமையாக இருந்தது. கடைசி சுற்றுக்கு முதல் சுற்றின் போது 30 வாக்குகள் முன்னிலை பெற்று வந்த திமுக வேட்பாளர் பெரிய கருப்பன், இறுதி சுற்றின் முடிவில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட திருமாறன் ஜி சுமார் 30 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த நிலையில் கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து தவெக வேட்பாளர் வெற்றி பெற்றார் என்று அறிவிப்பு வெளியிடுவதற்க்கு முன்பாக நடந்த பரபரப்பு சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

இறுதி சுற்று முடிந்து ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், பெரியகருப்பன் ஆட்கள் அறிவிப்பை வெளியிடாமல் தடுத்து வைத்திருந்தனர், 2009 பார்முலாவை கையில் எடுக்க தொடங்கினார்கள், அதாவது கடந்த 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பா சிதம்பரம் தோல்வி அடைந்து விட்டார் என்று அதிகார்பூர்வமாக அறிவித்த பின்பு, அடுத்த சில நிமிடங்களில் பா சிதம்பரம் வெற்றி பெற்றார் என்ற அறிவிப்பு வெளியானது.

அதே பார்முலாவை கையில் எடுத்து ஒரு ஒட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பனை , வெற்றி பெற்றார் என்று அறிவிக்கும் திட்டத்தில் பெரியகருப்பன் ஆட்கள் கூச்சலிட, அங்கே தனி ஒருவனாக சிக்கி கொண்டிருந்தார் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி, இப்படி ஒரு பரபரப்பான சூழலில், அங்கே இருந்த பாஜக திருப்பத்தூர் சட்டமன்ற பொறுப்பாளர் மேப்பல் சக்தி உடனே பாஜக வேட்பாளர் திருமாறன் ஜிக்கு தகவல் கொடுத்து உடனே வாக்கு என்னும் இடத்திற்கு வரவைத்துள்ளார்.

மாலை 5 மணிக்கு திருமாறன் ஜி வாக்கு என்னும் இடத்திற்கு என்ட்ரி கொடுத்த போது தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியை சுற்றி திமுகவினர் கூச்சலிட்டு கொடிருக்கிறார்கள். தவெக வெற்றியை டிக்ளர் செய்ய கூடாது என திமுகவினர் கூச்சலிட, உடனே அதிகாரிகளிடம் பாஜக வேட்பாளர் நான் சொல்கிறேன், தவெக வேட்பாளர் வெற்றியை டிக்ளர் செய்யுங்கள் என திருமாறன் ஜி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வாக்கு என்னும் இடத்திற்கு வருகிறார், அவரும் திமுக தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வாக்கு என்னும் இடத்திற்கு வெளியே பெரியகருப்பனுக்கு ஆதரவாக வெளியூரில் இருந்து ஆட்களும் காரில் வந்து இறங்கி இருக்கிறார்கள், அதில் சிலர் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தால் இடை தேர்தல் நடக்கும் அதில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றெல்லாம் தவெக வேட்பாளருக்கு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கு தோளோடு தோளாக நின்று, ஒரு தேசிய கட்சியின் வேட்பாளர் நான் தவெக வேட்பாளர் சீனிவாசன் சேதுபதி வெற்றியை ஏற்று கொள்கிறேன், நீங்கள் அவர் வெற்றி பெற்று விட்டார் என்று டிக்ளர் செய்யுங்கள் என திருமாறன் ஜி அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து இருக்கிறார், இதன் பின்பே நள்ளிரவில் திருப்பத்தூர் தொகுதி தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வெளியே வந்த திருமாறன் ஜியை அங்கே இருந்த தவெக வேட்பாளர் உட்பட மற்ற தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் நன்றி தெரிவித்து வெற்றியை பகிர்ந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here