தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு தமிழக அரசியலில் மிக பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தும் விதத்தில் தமிழக பாஜகவில் பல மாற்றங்கள் அரங்கேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அண்ணாமலையின் ரீ என்ட்ரி என்பது இந்த முறை வேற லெவெலில் இருக்கும் என்கிறது கமலாலயம் வட்டாரங்கள். தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவி காலம் முடிந்து தலைவர் பதவி மாற்றம் செய்யப்பட்ட பின்பு சுமார் 1 வருடம் கடந்தும் இதுவரை அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை எந்த ஒரு முக்கிய பொறுப்பும் வழங்கப்பட வில்லை.
இதற்கு முக்கிய காரணம் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்றால், தேசிய தலைவர் நியமிக்கப்பட்டு தேசிய நிர்வாக பட்டியல் உறுதி செய்யப்பட வேண்டும், அந்த வகையில் தேசிய தலைவர் பதவி நியமனம் மிகவும் தாமதமானது, இந்நிலையில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின் பின்பு தேசிய நிர்வாக பட்டியல் வெளியாக இருக்கிறது இதில் அண்ணாமலை பெயர் இடம் பெறுமா.? அவருக்கு என்ன பொறுப்பு என்கிற பரபரப்பு தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை பாஜக தேசிய தலைமை அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு கொடுத்து தென் இந்தியாவில் நான்கு மாநில பொறுப்பாளராக நியமித்கும் முடிவில் இருந்து இருக்கிறது, ஆனால் தற்பொழுது நடந்து முடிந்துள்ள தமிழக சட்டசபை தேர்தலை மிக உன்னிப்பாக கவனித்த பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர்,
தமிழகத்தில் அண்ணாமலையின்றி தமிழக பாஜகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லமுடியாது, மேலும் அண்ணாமலையின் ரோல் தமிழக பாஜகவில் இல்லை என்றால் மேலும் தமிழக பாஜக பின்னோக்கி செல்லும் வகையில் அடுத்த தலைமுறைக்கான இளைஞர்களை தமிழக பாஜகவுக்குள் கொண்டு வரமுடியாது என்பதை தெரிந்து கொண்டு தமிழக்தத்தில் மட்டும் அண்ணாமலை முழு கவனம் செலுத்தும் வகையில் முக்கிய பொறுப்பு வழக்கு அமித்ஷா மற்றும் மோடி ஆகிய இருவரும் முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது.
அந்த வகையில் மத்திய அமைச்சரா.? மீண்டும் மாநில தலைவரா.? என்கிற இரண்டே வாய்ப்பு தான் அடுத்து அண்ணாமலைக்கு இருக்கும் பொறுப்பு என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திராவில் விரைவில் காலியாகும் ராஜ்யசபா இடங்களில் ஒன்றை கூட்டணி ஒதுக்கீட்டின் மூலம் பாஜக பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், அந்த இடத்திற்கு அண்ணாமலையின் பெயர் முக்கியமாக பரிசீலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அப்படி ராஜசபா உறுப்பினராக்கி மத்திய அமைச்சராக அண்ணாமலை வாய்ப்புள்ளது என்கிற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அல்லது மீண்டும் மாநில தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டு அடுத்து வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கான தமிழக தேர்தல் களத்தை தயார் செய்யும் வகையில் அண்ணாமலைக்கு முழு சுதந்திரம் கொடுத்து அடித்து ஆட வைக்கலாம் என்கிற முடிவிலும் டில்லி பாஜக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி ஒரு இக்கட்டான சூழலில் மீண்டும் மாநில தலைவராக அண்ணாமலை ஜார்ஜ் எடுத்து, தமிழக அரசியலில் அண்ணாமலை 2.0 என்று சொல்லும் வகையில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறவே வாய்ப்புள்ளது என்பதால், அடுத்து அண்ணாமலையின் என்ட்ரி வேற லெவெலில் இருக்கும் என்கிறது பாஜக வட்டாரங்கள்.

