கடந்த 2021 சட்டசபை தேர்தலின் பொழுது திமுக அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்யப்பட்ட வேர்ப்பு மனுவில், சுமார் 8 கோடி ரூபாய் சொத்து தனக்கு உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதில் குறிப்பிட்ட வேலூரில் உள்ளார் 98 லட்சம் மதிப்புள்ள அந்த ஒரு சொத்து தனக்கு கிப்ட் ஆக வந்தது என்று துரைமுருகன் தன்னுடைய வேட்பு மனுவில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பாக சில அமைப்புகள் ஈசி போட்டு பார்த்தது சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் 1968 ஆம் ஆண்டு துரைமுருகன் மனைவியின் சகோதரி குடும்பத்தினர் வாங்கிய சொத்தை மாற்றி இவருக்கு அந்த சொத்து பரிசாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது 1968 ஆம் ஆண்டு துரைமுருகன் எம்எல்ஏ ஆவதற்கு முன்பே பினாமி மூலம் சொத்துக்களை எப்படி விஞ்ஞான பூர்வமாக தங்கள் பெயருக்கு மாற்றுவது என்பது என்கின்ற உச்சகட்ட செயலை தான் துரைமுருகன் அன்றே செய்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும் துரைமுருகனின் வலது கரம் என்று கூறப்பட்ட குடியாத்தம் குமரன் பேசிய ஒரு ஆடியோவில், துரைமுருகனும் அவருடைய மகனும் சுமார் 60 ஆயிரம் கோடி சொத்துகளை சேர்த்துள்ளதாக அந்த ஆடியோவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் வண்டலூர் அருகே சுமார் 8 ஏக்கரில் அமைச்சர் துரைமுருகன் மனைவி பெயரில் உள்ள தொழிற்சாலை இன்றைய மதிப்பில் கணக்கிட்டால்,
கட்டிடம் மட்டுமே சுமார் 28 கோடி ரூபாய் வரும் என்றும் மற்றும் இடத்துடைய வேல்யூ சுமார் 16 கோடி வரும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆனால் இந்த சொத்தை மிகக் குறைந்த விலையிலேயே துரைமுருகன் கணக்கிட்டு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக – திமுக இரண்டு கட்சிகளுமே மாறி மாறி முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதும் திமுக மீதும் எந்த ஒரு ஊழல் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யாமல் இருந்து வருகிறார்கள்.
குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது உள்ள ஊழல் வழக்கை விசாரிப்பதற்காக தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்றெல்லாம் திமுகவினர் வாக்குறுதி கொடுத்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யாரும் இதுவரை சிறை செல்லவில்லை. குறிப்பாக மேலும் அதிமுக திமுக இரண்டு ஆட்சியிலையுமே மாற்றி மாற்றி ஊழல் தொடர்பாக எப்ஐஆர் போட்டால் அமலாக்கத்துறை உள்ளே வந்து விடும் என்பதால் தான்,
இதுவரை இரண்டு கட்சிகளுமே அவர்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு எப் ஐ ஆர் போடவில்லை என்றும், மேலும் அப்படி ஆர் போட்டாலும் தப்பிக்கக் கூடிய வகையில் உள்ள செக்ஷனில் எஃப் ஐ ஆர் போட போடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக சரியாக கையாண்டு துரைமுருகனை டார்கெட் செய்தால் வரும் தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்த வேண்டும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சமீபத்தில் ஒரு வழக்கில் துரைமுருகன் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டில் இருந்து தப்பித்து விடுவார் என்றும், ஆனால் கேஸ் வேகமாக நடத்த வேண்டும் என்பதற்காக தான் பிடிவாரென்று பிறப்பிக்கப்பட்டது என்றும், அந்த வகையில் பிடிவாரன்டில் இருந்து துரைமுருகன் தப்பித்தாலும், அவர் மீது உள்ள அந்த வழக்கு இனி மிக விரைவாக நடந்து முடிக்கப்படும்.
அந்த வகையில் தற்பொழுது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு வரும்பொழுது குறைந்தது துரைமுருகனுக்கு, இந்த வழக்கில் இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு இருக்கிறது, அப்படி இரண்டு வருடம் சிறை தண்டனை துரைமுருகன் மீது விதிக்கப்பட்டால் அவருக்கு சுமார் 6 வருடம் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

