அண்ணாமலை சொன்னது நடந்தது… டிஜிபி நியமனம்,… திமுக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

0
Follow on Google News

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பெறுப்பு டிஜிபி நியமனம் குறித்து கருத்து தெரிவித்து இருந்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு. மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது.

டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. திரு. சங்கர் ஜிவால் அவர்களைக் காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும்.

இந்த நிலையில், அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக. காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார் அண்ணாமலை.

இந்நிலையில் தமிழக காவல்துறை தலைவராக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், வெங்கடராமனுக்கு முன்பாக 8 மூத்த அதிகாரிகள் இருக்கும் நிலையில், 9 வது இடத்தில் இருக்கும் அவரை நியமித்ததற்கு விமர்சாங்கள் எழுந்தன.

மேலும், டிஜிபி ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே யுபிஎஸ்சி-க்கு தகுதியான புதிய டிஜிபி பெயர்களை மாநில அரசு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு மீறியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன. இந்த நிலையில், தமிழக டிஜிபி நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபியை ஏன் நியமனம் செய்தீர்கள்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு அரசு தரப்பில், புதிய டிஜிபியை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தேர்வாணையத்திற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதையும் விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, டிஜிபி பதவிக்கான அதிகாரிகள் பெயர் பட்டியல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது அரசியல் சாசன அமைப்பு. அதற்கான பொறுப்புகளையும் அறிவோம். ஆகையால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அந்த ஆணையத்துக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் ஒப்புக் கொள்ள கூடாது என்றார்.

இதனையடுத்து டிஜிபி பதவிக்காக தமிழ்நாடு அரசு அனுப்பிய அதிகாரிகள் பரிந்துரை பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் விரைவாக பரிசீலித்து ஒப்புதல் அளிக்க வேண்டும்; இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு, புதிய டிஜிபியை நியமிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.