தனியார் ஊடகத்தின் நிகழ்ச்சியில் பேசிய Savio Rodrigues என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் “டீப் ஸ்டேட்”, சிஐஏ மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் இணைந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பதவியில் இருந்து நீக்குவதற்காக ‘ஆபரேஷன் டிவெர்ஷன், டிசெப்ஷன் அண்ட் டிவிஷன்’ என்ற ரகசிய நடவடிக்கையை தொடங்கியதாக கூறியுள்ளார்.எனினும், இந்த திட்டம் இப்போது கைவிடப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையில், ‘மோடியை இந்திய பிரதமர் மோடியின் பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும்’ என்ற ஒற்றை இலக்குடன் தொடங்கப்பட்டதாகவும், ‘ஆபரேஷன் 37’ என்ற ரகசிய முயற்சி மூலம், பாஜகவுக்குள்ளேயே 37 பாராளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தி, கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மத்தியில் குழப்பத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது என்றும், இதன் மூலம் பிரதமர் மோடியை பதவி விலக செய்ய அழுத்தம் கொடுக்க முற்பட்டதாகவும் Savio Rodrigues தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த சதித்திட்டத்திற்கு பின்னால் இருந்த முக்கிய காரணம், பிரதமர் மோடி அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ப செயல்படாததுதான் என்றும். குறிப்பாக, இந்திய நலன்களுக்கு முன்னுரிமை அளித்ததால், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போனது, அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்றும் Savio Rodrigues கூறினார்.
ஆனால் இந்த ரகசிய திட்டம் குறித்த தகவல் கசிந்ததால், அது பொதுவெளிக்கு வந்த பிறகு, திட்டம் கைவிடப்பட்டது. இந்த திட்டம் கசிந்ததற்கான காரணம், செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்த உயர் மட்ட கூட்டங்களில், அமெரிக்க குழுவில் இருந்த சிலரே இந்த தகவலை வெளியிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக Savio Rodrigues கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்காவில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், ஆப்பிள் நிறுவனம் அவரது பேச்சை பொருட்படுத்தாமல், இந்தியாவில் தனது முதலீடுகளை அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் முதலீடு செய்வதை விட மற்ற நாடுகளில் முதலீடு செய்வதை விட இந்தியாவில் உற்பத்தி செய்வதுதான் சிறந்தது என்று ஆப்பிள் நிறுவனம் நம்புவதே இதற்கு முக்கிய காரணம்.
இது இந்தியாவின் உற்பத்தி துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமையும். அமெரிக்கா 50% வரி விதித்த போதிலும், இந்தியாவிற்கு முதலீடுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இது பிரதமர் மோடியின் மிகப்பெரிய வெற்றியாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், இந்த நேரத்தில் இந்தியாவுடனான உறவை மீட்டெடுக்க நீங்கள் தயாரா? என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், நான் எப்போதும் தயாராக இருப்பேன். நான் எப்போதும் பிரதமர் மோடியுடன் நண்பர்களாக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். நான் எப்போதும் நண்பர்களாகவே இருப்பேன், ஆனால் இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் என்ன செய்கிறார் என்பது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் சிறப்பு வாய்ந்த உறவைக் கொண்டுள்ளன. கவலைப்பட ஒன்றுமில்லை. நமக்கு அவ்வப்போது தருணங்கள் மட்டுமே கிடைக்கும்” என பல்டி அடித்துள்ளார்.

