2007-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை துரைமுருகன் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவர் ரூ.1.40 கோடி வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்க்கப்பட்டதாக, 2011-ம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் ஊழல் தடுப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
2017-ஆம் ஆண்டு, இந்த வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுவித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து துரை முருகன் மற்றும் சாந்தகுமாரி இருவரையும் விடுவித்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சிறப்பு நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரித்து 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.

அதன்படி, வழக்கு வேலூரில் இருந்து சென்னையில் உள்ள 10-வது ஊழல் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி இ.பக்தவச்சலு முன் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் இருவரும் ஆஜராகாததால், இருவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையில், வழக்கை வேலூருக்கு மாற்றவும், எலும்பு முறிவு காரணமாக துரைமுருகனுக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கவும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், செப்டம்பர் 3-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இப்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில்,
இதற்கிடையே துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் அமைச்சர் துரைமுருகன் ஆஜராகவில்லை. அவரது மனைவி மட்டும் நேரில் ஆஜராகி பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற நீதிமன்றம் சாந்தகுமாரிக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்தது.
அதேநேரம் அமைச்சர் துரைமுருகன் இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாத நிலையில், அவருக்கு எதிரான பிடிவாரண்டைச் செப்டம்பர் 15ஆம் தேதி அமல்படுத்தத் தமிழ்நாடு போலீசாருக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் கைதாக போகிறாரா என்கிற பரபரப்பு ஒரு பக்கம் நீடித்து வருகிறது. இத்தனை தொடர்ந்து ஜெர்மனி சென்ற முதல்வர் முக ஸ்டாலினுக்கு இந்த தகவல் சென்று இருக்கிறது.
இதனை தொடர்ந்து துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது, இதற்கு முன்பு ஆளும் கட்சியை சேர்ந்த செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரம் திமுக ஆட்சிக்கு மிக பெரிய அவ பெயரை பெற்று கொடுத்தது, இந்நிலையில் இன்னும் தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மூத்த அமைச்சர் துரைமுருகன் கைது செய்யப்பட்டால் அது தேர்தலில் திமுகவுக்கு எதிராக எதிரொலிக்கும்.
அந்த வகையில் இந்த விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் கைது செய்யாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்றும், இந்த வழக்கை வரும் 2026 சட்டசபை தேர்தல் முடியும் வரை எப்படி தாமதம் செய்வது என்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் திமுக தலைமை ஆலோசனை நடத்தி, பின்பு அமைச்சர் துரைமுருகனிடம் இந்த வழக்கை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்து திமுக தலைமை பேசியதாக கூறப்படுகிறது.

