தமிழ்நாட்டில் அதிக சொத்துக்களை வைத்துள்ள திமுக அமைச்சர்களின் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் அமைச்சர்களின் சொத்து மதிப்பு, கல்வித் தகுதி, குற்ற வழக்குகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 10ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான ஆர் காந்தி முதல் இடத்தில் உள்ளார் இவருடைய சொத்து மதிப்பு சுமார் ரூ.ரூ.47.94 கோடி.
மேலும் அமைச்சர் ஆர் காந்தி மீது 3 குற்ற வழக்குகள் இருக்கின்றன. அதில் 3ம் தீவிர குற்ற வழக்குகளாக உள்ளன. பட்டியலில் அதற்கு அடுத்து 2வது இடத்தில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இருக்கிறார். இவரின் பெயரில் ரூ.41.81 கோடி சொத்துக்கள் இருக்கின்றன. மேலும் இவர் மீது 2 தீவிர வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளார்.

இவர் பெயரில் ரூ.38.89 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளனர். மேலும் இவர் மீதும் 4 குற்ற வழக்குகள் இருக்கின்றன. சொத்து பட்டியலில் 4வது இடத்தில் திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளார், இவர் பெயரில் ரூ.30.80 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளனர் . மொத்தமாக 8 குற்ற வழக்குகள் அமைச்சர் துரைமுருகன் மீது உள்ள நிலையில், அதில் 2 வழக்குகள் தீவிரமானவை. சமீபத்தில் கூட ஒரு வழக்குக்காக துரைமுருகனுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடதக்கது.
அடுத்து 5வது இடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரூ.29.07 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உடன் 5 வது இடத்தில் உள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது 22 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வைகையில் பேசிய வழக்கு மிக தீவிரம் அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்து 6வது இடத்தில் திமுகவின் கஜானா என்று சொல்ல கூடிய அமைச்சர்களின் ஒருவரான ஏவா வேலு இடம் பிடித்துள்ளார்.
முதுநிலை படிப்பு கொண்ட அமைச்சர் எவ வேலு பெயரில் மட்டும் 23.32 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இவர் மீது உள்ள 7 குற்ற வழக்குகளில், 2 தீவிர குற்ற வழக்குகள் என்பது குறிப்பிட்டத்தக்கது. 7 வது இடத்தில் அமைச்சர் சாமிநாதன் பெயரில் ரூ.21.07 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இவர் மீது 3 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 8வது இடத்தில் அமைச்சர் ரகுபதி பெயரில் ரூ.15.32 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இவர் மீது மொத்தமாக 23 குற்ற வழக்குகள் இருக்கின்றன.
அதேபோல் 9வது இடத்தில் அமைச்சர் முத்துசாமி இருக்கிறார். இவருக்கு ரூ.13.68 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இவர் மீது 9 குற்ற வழக்குகள் இருக்கின்றன. 10வது இடத்தில் அமைச்சர் சிவசங்கர் இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.13.55 கோடியாகும். இவர் மீது 46 குற்ற வழக்குகள் உள்ளன. அதில் 7 வழக்குகள் தீவிரமானவை என்று தெரிய வந்துள்ளது. 11வது இடத்தில இருக்கும் அமைச்சர் முத்துசாமி பெயரில் ரூ.13.68 கோடி சொத்து உள்ளது.
12வது இடத்தில் உள்ள அமைச்சர் சிவசங்கர் பெயரில் ரூ.13.55 கோடி சொத்தும், 13வது இடத்தில் உள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு பெயரில் ரூ.11.87 கோடி சொத்தும் உள்ளது, அடுத்து 14வது இடத்தில் உள்ள அமைச்சர் மூர்த்தி (மதுரை பெயரில் ரூ.11.35 கோடி சொத்தும், 15வது இடத்தில உள்ள அமைச்சர் நாசர் பெயரில் ரூ.11.33 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது.
இந்த பட்டியலில் முதல்வர் முக ஸ்டாலின் பெயர் 21 வது இடத்தில் உள்ளது. பட்ட படிப்பு முடித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின் பெயரில் ரூ.8.88 கோடி சொத்துக்கள் உள்ளது, இது மற்ற அமைச்சர்களான மூர்த்தி, ஆர் காந்தி, டி ஆர் பி ராஜா ஆகியோரின் பெயரில் இருக்கும் சொத்துக்களை விட மிக குறைவாக முதல்வர் முக ஸ்டாலின் பெயரில் சொத்துக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

