சிக்கலின் மாட்டிய முதல்வர்… சிக்க வைத்த TRB ராஜா… எனக்கு தெரியாது என கைவிரித்த கனிமொழி…

0
Follow on Google News

முதல்வர் முக ஸ்டாலின் ஜெர்மனி பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வருகிறார்கள், குறிப்பாக முதல்வர் முக ஸ்டாலின் ஜெர்மனி பயணத்தில், முதல்வர் பின்னால் 10 கார் அணி வகுத்தது, அந்த முக்கிய பிரமுகர் முதல்வரை வரவேற்க அவருடைய காரை அனுப்பி வைத்தார், ஜெர்மனியில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு, பல்கலை கழகத்தில் உள்ள நூலகத்தை பார்வையிட்டார் முதல்வர்.

பெரியார் புகைப்படத்தை வெளியிட்டார் முதல்வர் என இப்படி ஒரே பில்டப் செய்தியாக தான் வருகிறதே தவிர, முதலீடுகளை ஈர்க்க சென்ற முதல்வர், தொழில் அதிபர்களிடம் ஆலோசனை கூட்டத்தில் பேசினார், இத்தனை ஆயிரம் கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டுள்ளது, என்கிற ஆக்கபூர்வமான எந்த ஒரு செய்தியும் முதல்வர் ஜெர்மனி பயணத்தில் இருந்து வரவில்லை, இதனாலே எதிர்க்கட்சிகள் முதல்வர் ஜெர்மனி பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் திமுக அமைச்சர் TRB ராஜா தவறாக முதல்வரை வழிநடத்துவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது, முதல்வரிடம் தன்னுடைய நெருக்கத்தை அதிகரித்து கொண்டு, தற்பொழுது திமுக முக்கிய அமைச்சர்களான தங்கம் தென்னரசு, PTR பழனிவேல் ராஜன், துரைமுருகன் போன்ற பல அமைச்சர்களை ஓவர் டேக் செய்யும் வகையில் TRB ராஜா சில விஷயங்களை சொன்னால் அது குறித்து யோசிக்காமல் முதல்வர் செய்யப்படுவது இப்போது அவருக்கு பல சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது மாநில முதல்வர்கள் இந்தியா என்ன முடிவு எடுக்கிறதோ அந்த பக்கம் ஆதரவு கொடுத்து இந்தியா பக்கம் இருக்க வேண்டும், ஆனால் முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் நடந்துகொண்ட விதம், அது இந்தியாவுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் அமைத்ததும், இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல், முதல்வரை சிக்கலிலும் மாட்டிவிட்டது.

அதாவது இந்தியா மீது அமெரிக்கா விதித்த வரி குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தெரிவிக்கையில், குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் இரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்? அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகண்டு, #VishwaGuru எனும் தங்கள் பட்டப் பெயருக்கு நியாயம் செய்யுங்கள் என பிரதமருக்கு தெரிய படுத்தி இருந்தார் முதல்வர்.

இது அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் இந்தியா எடுக்கும் முடிவுக்கு எதிராகவும் முதல்வர் முக ஸ்டாலினின் இந்த கருத்து அமைந்து இருந்தது. ஒரு மாநிலத்தின் முதல்வர் அவருக்கான உயரம் என்ன என்பதை அறியாமல், டிரம்ப் , அமெரிக்கா , எண்ணெய் குறித்தெல்லாம் கருத்து தெரிவித்தது, யாருப்பா இதெல்லாம் இவருக்கு எழுதி கொடுப்பது என்கிற விமர்சனம் எழுந்தது.

குறிப்பாக இந்தியா நடவடிக்கைகளுக்கு எதிராக அந்த நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தின் முதல்வரே கருத்து தெரிவிப்பது சரியா என்கிற விவாதம் அனல் பறந்தது, இந்நிலையில் மத்திய அரசு தரப்பில் திமுக எம்பி கனிமொழியை தொடர்பு கொண்டு முதல்வர் முக ஸ்டாலின் கருத்து குறித்து கேட்டதற்கு, இதெல்லாம் யார் ஐடியா கொடுப்பது என்று தெரியவில்லை என கைவிரித்து விட்டாராம்.

ஆனால் முதல்வருடன் வெளிநாடு பயணத்தில் இருக்கும் அமைச்சர் TRB ராஜா தான் இது போன்று முதல்வருக்கு தவறான ஐடியா கொடுத்து முதல்வரை சிக்கலில் சிக்க வைக்கிறார் என்றும், குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு நிகராக தன்னை அரசியலில் வளர்த்து கொள்ள முயற்சிக்கு TRB ராஜா , அடுத்து மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், செல்வம் செழிக்க கூடிய இதே தொழில் துறையை கைப்பற்றுவதற்கா அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.