சமீபத்தில் தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நடத்திய மீட்டிங் ல் என்ன பேசப்பட்டுள்ளது என்கிற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. திமுகவை வரும் 2026 சட்டசபை தேர்தலில் வீழ்த்தி ஆக வேண்டும் என்பதற்காக அதிமுக உடன் கூட்டணி அமைத்தார் அமித்சா, ஆனால் ஏற்கனவே கூட்டணியில் இருந்த ஓபிஎஸ், டி டி வி இவர்கள் எல்லாம் வெளியே சென்றது அமித்ஷாவை கடும் அப்செட்டில் உள்ளாகி இருக்கிறது.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் மீது மிகுந்த மரியாதை வைத்து பாஜக உடன் கூட்டணியில் இடம் பெற்ற ஓபிஎஸ், டிடிவி இருவரும் எப்படி கூட்டணியை விட்டு வெளியேறினார்கள் என்கிற கேள்வியை அமித்ஷா டெல்லியில் தமிழக பாஜக முக்கிய தலைவர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில் எழுப்பி இருக்கிறார், குறிப்பாக மேலும் பல கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கையில், ஓபிஎஸ், டிடிவி இருவரும் வெளியேறியது மிக பெரிய இழப்பு என தன்னையுடைய ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார் அமித்ஷா.

பெரும்பாலும் அமித்ஷா தொடர்ந்து இந்தியில் பேசியதால், அங்கே இருந்த பாஜக தலைவர்களில் ஹெச் ராஜா, அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி ஆகியோருக்கு மட்டும் அமித்ஷா பேசுவதை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் அதற்காக என்ன செய்யவேண்டும் என்பதையும் தமிழக பாஜக தலைவர்களிடம் அறிவுறுத்தி இருக்கிறார் அமித்ஷா.
இந்நிலையில் சமீப காலமாக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிக முக்கியத்துவத்தை மத்திய பாஜக கொடுத்து வருவதை பார்க்க முடிந்தது, திருநெல்வேலி கூட்டத்தில் அண்ணாமலைக்கு அமித்ஷா கொடுத்த முக்கியத்வத்திற்கு பின்பு, அண்ணாமலை குறித்து யாரும் விமர்சனம் செய்ய கூடாது என அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார் எடப்பாடி என்கிற செய்தியும் வெளியானது.
மேலும் சமிபதியில் நடந்து ஜி கே மூப்பனார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேடையில் அண்ணாமலைக்கு கொடுத்த முக்கியத்துவம், இதெல்லாம் மத்திய பாஜக தலைமை அண்ணாமலை செல்வாக்கு குறித்து நன்கு அறிந்து அவருக்கான முக்கியத்துவத்தை தொடர்ந்து கொடுத்து வருவதை உணர்த்துகிறது. இந்நிலையில் அண்ணாமலைக்கு ஒருகிணைக்கும் கேப்பாசிட்டி இருப்பதை உணர்ந்துள்ளது மத்திய பாஜக தலைமை.
அந்த வகையில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்க முடிவு செய்துள்ள மத்திய பாஜக, விரைவில் பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு வெளியான உடனே அண்ணாமலைக்கு தேசிய அளவில் தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்க இருப்பதாக உறுதி படுத்துகிறது டெல்லி பாஜக தலைமை. மேலும் அண்ணாமலையால் மட்டுமே டிடிவி. ஓபிஎஸ், அன்புமணி , பிரேமலதா போன்ற கூட்டணி கட்சி தலைவர்களை அரவணைப்போடு ஒருங்கிணைக்க முடியும் என அமித்ஷா நம்புகிறார்.
அந்த வகையில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டு தமிழகத்தில் கூட்டணியை வலுப்படுத்தும் பொறுப்பை அண்ணாமலைக்கு கொடுக்க அமித்ஷா முடிவு செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது. மேலும் சமீபத்தில் டெல்லியில் நடந்த பாஜக முக்கிய தலைவர்கள் உடனான சந்திப்பின் போது, உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இன்னும் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் உட்கட்சி பஞ்சாயத்தை ஓரமாக வைத்து விட்டு , தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று திமுகவை எப்படி வீழ்த்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வேலை செய்யவேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்திய அமித்ஷா. வரும் 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என சற்று ஆக்ரோஷமாகவே பேசியதாக கூறப்படுகிறது.

