மத்திய அரசால் தடை செய்யப்பட்ட நாய்… உதயநிதிக்கு எப்படி கிடைத்தது… சட்டபடி என்ன தண்டனை…

0
Follow on Google News

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமீபகாலமாக , தன்னுடைய செல்ல பிராணியான நாய் உடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை அவருடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார், ஆனால் உதயநிதி புகைப்படத்தில் இருக்கும் அந்த நாய், கேன் கோர்சோ என்கிற வகை நாய். இந்த நாய் இந்தியாவில் தடை செய்யப்பட்டது வகையான நாய், அப்படி இருக்கையில் தடையை மீறி உதயநிதி ஸ்டாலின் அந்த நாயை வளர்த்து வருவதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் உடன் இருக்கும் கேன் கோர்சோ வகை உட்பட மொத்தம் 23 வகை ஆபத்தான நாய்களை விற்பனை செய்வதற்கும், வளர்ப்பதற்கும் தடை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடந்த 2024ம் வருடம் மார்ச் மாதம், உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மார்ச் 12 தேதியில் மத்திய அரசு எழுதிய கடிதத்தில்,

ஏற்கெனவே செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டு வரும் சில இன நாய்கள் மேலும் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்க, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையினர் அந்த இன நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்துவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 12, 2024 முதல் மனித உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ரோட்வீலர் (Rottweiler), பிட்புல் (Pitbull), டெரியர் (Terrier), கேன் கோர்சோ (Cane Corso) உள்ளிட்ட 25 வகையான நாய்களை இறக்குமதி செய்ய, விற்பனை செய்ய மற்றும் இனப்பெருக்கம் செய்ய தடை விதித்து மத்திய அரசு அறிவித்தது.

இருப்பினும், இந்த நாய் இனங்களை ஏற்கனவே செல்லப்பிராணிகளாக வைத்திருப்பவர்கள், அவற்றுக்கான முறையான உரிமம் மற்றும் பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவரிடமிருந்து கருத்தடை சான்றிதழ் பெற்றிருந்தால், அவற்றை வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் கூறியிருந்தது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, 2024 மே 02 அன்று மத்திய அரசு ஒரு பொதுச் செய்தி வெளியிட்டு, பொதுமக்களிடம் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளை கேட்டிருந்த நிலையில், 2025 ஜனவரியில் “2024 மார்ச் மாத அறிவிப்பை தற்போது நடைமுறைப்படுத்தவில்லை, எதிர்ப்புகளை பரிசீலித்த பின்பே ‘சரியான முடிவு’ எடுக்கப்படும்” என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் கேன் கோர்சோ (Cane Corso) உள்ளிட்ட 25 வகையான நாய்களுக்கான மத்திய அரசின் தடை உத்தரவு நாடு முழுவதும் தற்போது அமலில் இல்லை. இந்நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் சர்ச்சையில் சிக்கியுள்ள கேன் கோர்சோ நாயுடன் கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசுத் தடை உத்தரவு பிறப்பித்ததற்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலின் , கேன் கோர்சோ நாயை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. ஆகையால் உதயநிதி ஸ்டாலின் சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்றும், ஆகையால் அவர் மீது எந்த நடவடிக்கையும் சட்ட ரீதியாக எடுக்க முடியாது என கூறப்படுகிறது.

ஆனால் இது போன்று தடை செய்யப்பட்ட நாய் வகைகளின் ஒன்றான பிட் புல் என்ற உயர் ரக நாய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் அதன் உரிமையாளரையும், மற்றும் வழியில் நடந்த சென்ற கருணாகரன் என்பவரை கடித்ததில் கருணாகரன் என்பவர் பரிதாபமாக உயிர் இழந்தது குறிப்பிட்டத்தக்கது.