கருணாநிதி சிலை வைக்க முடியாது… நீதிமன்றம் அதிரடி உத்தரவு… செம்ம டோஸ் வாங்கிய திமுக அரசு..

0
Follow on Google News

நெல்லை மாவட்டம் வள்ளியூர் காய்கறி சந்தை நுழைவுவாயிலில் தமிழக முன்னாள் முதல்வர் கருணா நிதியின் வெண்கலச்சிலை மற்றும் அலங்கார தோரண வாயில் அமைக்க அனுமதி கோரி பால்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ். எம்.சுப்பிரமணியம், ஏ.டி. மரியா க்ளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு,

பொது இடங்களில் தலைவர்களின் சிலை அமைக்கும் விவகாரத்தில் அனைத்து தலைவர்களின் சிலைகளையும் ஒரே இடத்தில் அமைக்கும் வகையில் தலைவர்கள் பூங்கா அமைக்கத் தேவையான இடங்களை அடையாளம் காண வேண்டும் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு தலைவர்கள் பூங்கா உருவாகும் போது அந்த தலைவர்களின் கொள்கைகள் மற்றும் கருத்துக்களை இளைஞர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாகும்.

அதைவிடுத்து பொது இடங்களில் சிலை அமைத்தால் அதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன எனக்கூறி சிலை வைக்க அனுமதி மறுத்தும், அரசாணையை திரும்ப பெறுவது குறித்து அரசு பதிலளிக்கவும் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டனர் இந்த உத்தரவை எதிர்த்தும், வள்ளியூர் சந்தை அருகில் கருணாநிதியின் முழு உருவ சிலை அமைக்கவும் அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி இருந்தார். சிலை நிறுவுவதற்கு நெடுஞ்சாலைத் துறை, பஞ்சாயத்து உள்ளிட்ட அனைவரின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், மனுதரார் தொடர்ந்த வழக்கை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் சிலையை நிறுவ அனுமதி மறுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதிகள், மக்களின் வரிப் பணத்தில் முன்னாள் தலைவருக்கு ஏன் சிலை வைத்து ஏன் துதிபாட வேண்டும், என கருத்து தெரிவித்தனர். மேலும் ஒரு தலைவர் புகழை பரப்புவதற்காக நிறுவப்படும் சிலை பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் உயர்நீதிமன்றம் சிலையை நிறுவ அனுமதி மறுத்துள்ளது. அந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் வில்சன் மனுவை திரும்பப் பெற அனுமதி அளிக்க வேண்டும் என்றும், கருணாநிதியின் சிலை அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை மீண்டும் அணுக அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்தும், அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில், சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்றார் முதலமைச்சர் முதல் அமைச்சர் சொன்னது எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சி, கைவிடப்பட்ட இந்த 256 அறிவுப்புகள்தான். நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தையின் சிலை வைத்தது மட்டும் தான் என அண்ணாமலை தெரிவித்தது குறிப்பிடதக்கது.