ரஜினிக்கு நோ சொன்ன நடிகை… இவர் கூட நான் எப்படி நடிப்பது…

0
Follow on Google News

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். அல்லது ஒரு காட்சியிலாவது அவருடன் சேர்ந்து நடித்துவிட வேண்டும் என்று கூறும் பல நடிகைகள் இன்னும் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். நடிகைகள் மட்டுமல்ல, இன்றைய இளம் நடிகர்கள் பலரும் கூட ரஜினி சார் படத்தில் ஒரு காட்சியில் அவருடன் நடித்தால் கூட போதும். சம்பளம் கூட கேட்க மாட்டோம் என்றும் நேர்காணல்களில் கூறுகின்றனர்.

தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத ஒரு உச்ச நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகவும் அதிசயத்தக்கது அபூர்வமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சமீப காலமாக இளம் இயக்குனர்களின் நாயகனாக ரஜினிகாந்த் தொடர்ந்து நடித்து வருகிறார். பா ரஞ்சித் நெல்சன் திலீப்குமார் கார்த்திக் சுப்பராஜ் லோகேஷ் கனகராஜ் தசெ ஞானவேல் என இளம் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் இந்தி படங்களிலும் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கூலி படத்தில் ரஜினி நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. ஆனால் கதை திரைக்கதை தான் சொதப்பி விட்டது. இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாலக்காட்டில் தற்போது நடந்து வருகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டில் வெளியாக உள்ளது.

பொதுவாக நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க கதாநாயகிகள் மத்தியில் கடும் போட்டியே நிலவி வருகிறது. எந்த நடிகையுமே ரஜினியுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியதில்லை. ஆனால் ஒரே ஒரு நடிகை மட்டும் ரஜினியுடன் நடிக்க தயங்கி இருக்கிறார். ரஜினியுடன் 4 படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை அவர் வேண்டுமென்றே தவிர்த்து இருக்கிறார். அந்த நடிகை உலக அழகி என்று கொண்டாடப்பட்ட ஐஸ்வர்யா ராய் தான்.

நடிகை ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் நீண்ட கால ஆசையாக இருந்திருக்கிறது. முதலில் படையப்பா படத்தில் சௌந்தர்யா கேரக்டரில் நடிக்க ரஜினி ஆசைப்பட்டது ஐஸ்வர்யா ராயை தான். ஆனால் வேறொரு படத்தில் கமிட்டாகி இருப்பதாக சொல்லி ஐஸ்வர்யா ராய் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பிறகு பாபா படத்தில் மனிஷா கொய்ராலா கேரக்டரில் ஹீரோயினாக நடிக்க ஐஸ்வர்யா ராயை ரஜினி அழைத்திருக்கிறார். அப்படி ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நான் நடிக்க மாட்டேன் என்று அவர் மறுத்து விட்டார்.

அதைத் தொடர்ந்து சிவாஜி படத்திலும் சந்திரமுகி படத்திலும் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ரஜினி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. கடைசியாக எந்திரன் படத்தில் ரஜினியுடன் நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒருவழியாக சம்மதித்திருக்கிறார். அதற்கு காரணம் இயக்குனர் ஷங்கர் மிகவும் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதுதான்.

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய் பிரசாந்துடன் நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் இயக்குனர் ஷங்கர் கேட்டுக் கொண்டதால் மறுக்க முடியாமல் எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.