ஆட்டத்தை தொடங்கிய அண்ணாமலை… மோடியிடம் இருந்து வந்த உத்தரவு… ஆகஸ்டில் தரமான சம்பவம்…

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவி காலம் முடிந்ததும், அடுத்து மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்று கொண்டார். இதனை தொடர்ந்து மாநில தலைவராக இருந்த போது தொடர்ந்து திமுகவுக்கு எதிரான அரசியலை மிக தீவிரமாக செய்து வந்த அண்ணாமலை, மாநில தலைவர் மாற்றத்திற்கு பின்பு முன்பு இருந்து திமுகவுக்கு எதிரான தீவிர அரசியல் தற்பொழுது இல்லை.

மேலும் கட்சி நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளாத அண்ணாமலை, பொது நிகழ்ச்சி, ஆன்மீக நிகழ்ச்சி, கல்லூரி நிகழ்வுகளில் சிறப்பு அழைப்பாளராக தொடர்ந்து பங்கேற்று வருகிறார். குறிப்பாக மாநில தலைவர் மாற்றத்திற்கு பின்பு மதுரையில் அமித்சா பங்கேற்ற நிகழ்வு, மற்றும் மதுரை முருக பக்தர் மாநாடு இந்த இரண்டு நிகழ்வில் மட்டுமே அண்ணாமலை பங்கேற்றார். இந்த இரண்டு நிகழ்விலும் அண்ணாமலை பெயரை மேடையில் உச்சரித்ததும், பாஜக தொண்டர்கள் செய்த ஆரவாரம் இந்தியாவையே திரும்பி பார்க்க செய்தது.

இந்நிலையில் மாநில தலைவர் மாற்றத்திற்கு பின்பு, அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என அமித்சா தெரிவித்து இருந்தார். ஆனால் பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு வெளியான பின்பே தேசிய நிர்வாக பட்டியல் வெளியாகும், ஆகையால் தேசிய தலைவர் தாமதமாகி வருவதால், தேசிய அளவில் அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு என்பது குறித்த அறிவிப்பும் தாமதமாகி வருகிறது.

அதே நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தலைமை பொறுப்புக்கு வந்த பின்பு பாஜகவில் இருக்கும் எந்த முக்கிய தலைவர்களும், பாஜகவை விட்டு விலகி சென்று தனி கட்சி தொடங்குவது போன்ற எந்த நிகழ்வும் அரங்கேற வில்லை, இதற்கு முக்கிய காரணம், பாஜகவில் உழைக்க கூடிய தலைவர்கள் அனைவரையும் தட்டி கொடுத்து அரவணைத்து சரியான அங்கீகாரம் கொடுத்து தக்க வைத்து கொள்வதில் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவருமே வல்லமை பெற்றவர்கள்.

அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்ட பின்பு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவருமே அண்ணாமலையிடம் நடத்திய ஆலோசனையில், உங்கள் உழைப்பை பாஜக நன்கு உணரும், 3 சதவிகிதம் இருந்த பாஜகவை 11 சதவிகிதமாக உயர்த்தி காட்டினீர்கள். தமிழக பாஜகவை தமிழக முழுவதும் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்வதற்கு கடுமையான உழைப்பு நீங்கள் அர்ப்பணித்து இருக்கிறீர்கள்.

கண்டிப்பாக உங்களுக்கான அங்கீகாரத்தை கொடுப்போம் என பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவருமே அண்ணாமலையிடம் உறுதி அழைத்ததாக டெல்லியில் இருந்து வரும் தகவல் உறுதி படுத்துகிறது. இந்நிலையில் விரைவில் தேசிய தலைவர் அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில், அடுத்து ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் பாஜக தேசிய அளவில் உள்ள பட்டியல் வெளியாக இருக்கிறது.

அதில் அண்ணாமலைக்கு தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வழக்கப்பட இருப்பதாகவும், இதன் பின்பு தமிழக அரசியலில் இதற்கு முன்பு எப்படி திமுகவுக்கு எதிரான அரசியலை தீவிரமாக அண்ணாமலை செய்து வந்தாரோ அதை விட தீவிரமாக அண்ணாமலை செயல்படுவார் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்ற அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்கச்சென்றபோது, அவர் ஆகஸ்ட் முதல் தொடர்ச்சியாக பேசுவதாக கூறி சென்றார். செய்தியாளர்களை தான் ‘மிஸ்’ செய்வதாக கூறிய அவர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து தொடர்ச்சியாக பேசுவேன் என தெரிவித்தது பின்னணி காரணம் கூட இது தான் என கூறப்படுகிறது.