முகம் சுழிக்க வைக்கும் காட்சி… பிட்டு படம் பார்த்த அனுபவம்… வனிதா நடித்த மிஸஸ் அன்ட் மிஸ்டர் படத்தின் திரை விமர்சனம்…

0
Follow on Google News

காதல் திருமணம் செய்து கொண்ட வனிதா விஜயகுமாரும், ராபர்ட் மாஸ்டரும் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். நாற்பது வயதைத் தொட்டுவிட்ட வனிதா , குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால், ராபர்ட் குழந்தை வேண்டாம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டாலும், ராபர்ட் மூலம் கர்ப்பம் தரிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் வனிதா ஈடுபட்டு வருகிறார்.

வனிதா விஜயகுமார், நாற்பது வயது பெண்மணி கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். தன் கணவரை உருகி உருகி காதலிப்பவர், கருவுறுவதற்காக செய்யும் வேலைகள் அனைத்தும் ஓவர் ‘கில்மா’வாக இருக்கிறது. ஏதோ ஒரு நாள் எக்குத்தப்பாக ராபர்ட் விளையாண்டுவிட கரு வனிதாவின் வயிற்றில் உண்டாகிவிடுகிறது.

இந்தச் செய்தியைக் கேட்டவுடன் ராபர்ட் கோபத்தில் வனிதாவை நோக்கி வார்த்தைகளை வீச… அதனால் பெரிதும் மனதளவில் பாதிக்கப்படுகிறார் வனிதா. இதனால் ராபர்ட் இடம் இருந்து விலகி தன்னுடைய பூர்வீக ஊரான ஹைதரபாத்துக்கு வருகிறார். இப்போது ராபர்ட் தாய்லாந்தில் இருக்க வனிதா ஹைதராபாத்தில் வந்து தன்னுடைய மாமா வீட்டில் தங்கியிருக்கிறார்.

வனிதா பிரிவுத் துயரைத் தாங்க முடியாமல் தவிக்கும் ராபர்ட் , வனிதாவை தேடி இந்தியா வருகிறார். வனிதா ஆசைப்பட்டது போல் குழந்தை பெற்றுக் கொண்டாரா? அவரது கணவர் ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகியாக நடித்திருப்பதோடு எழுதி இயக்கியிருக்கும் வனிதா விஜயகுமார், தற்போதைய காலகட்ட இளைஞர்களுக்குப் பிடிக்கும் ஒரு படமாக கொடுக்க முயற்சித்திருந்தாலும், அதை பழைய பாணியில் கொடுத்திருக்கிறார். பாடல் காட்சிகளில் கவர்ச்சி, வசனக் காட்சிகளில் இரட்டை அர்த்தம், பழைய நடிகர்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டு நகைச்சுவை என முழுக்க முழுக்க கமர்ஷியலான ஒரு படத்தை கொடுத்திருந்தாலும், அதை முழுமையாக ரசிக்கும்படியான ஒரு படமாக கொடுக்க தவறியிருக்கிறார்.

ஒரு பெண் இயக்குநர் இரண்டாவது படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார். இதற்கு இவ்வளவு அதிகமான அடல்ட் கன்டென்ட் வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியும் நமக்குள் இருக்கிறது. குழந்தை வேண்டுமா? வேண்டாமா என்கிற வாக்குவாதத்தின்போதும், பேச்சுவார்த்தையின்போதும் வனிதாவும் ராபர்ட்டும் பேசுகின்ற பல பேச்சுக்கள் எல்லை மீறிப் போயிருக்கின்றன. டபுள் மீனிங் இல்லை… ட்ரிபிள் மீனிங் டயலாக் ஆகவே இந்தப் படத்தின் வசனங்கள் இடம் பெற்று இருப்பது முகத்தை சுளிக்க வைத்திருக்கிறது.

ஒரு நல்ல கதையை எந்த அளவுக்கு கெடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு கெடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர். இந்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தை குடும்பத்துடன் பார்க்க முடியாது. நிச்சயம் தனியாகப் போய்தான் பார்க்க வேண்டும். படத்தின் பெரும்போது தாய்லாத்தில் நடந்திருப்பதால் அதன் வெளிப்புற காட்சிகளை இன்னமும் அழகாக காட்டி இருக்கலாம். தாய்லாந்தில் எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் காட்டாமல் வெறுமனே சில இடங்களை மட்டுமே காட்டி படமாக்கி இருப்பதால் நமக்கு சப் என்று இருக்கிறது.

ஹைதராபாத் வந்து இறங்கி இருக்கிறார்கள் என்பதை வசனத்தில் சொல்லிவிட்டு சென்னையிலேயே படத்தை ஷூட் செய்து இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது இப்படி எல்லாம் படம் எடுத்தால் எப்படிங்கோ…?