கடந்த சில தினங்களாக நடிகை வனிதா விஜயகுமார் கொளுத்திப் போட்ட இளையராஜா வீட்டுக்கு நான் மருமகளா போக வேண்டியவ என்ற ஒற்றை டயலாக் இணையத்தில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. என்ன பேச வெச்சுடாதீங்க, அப்புறம் உண்மையெல்லாம் பேச வேண்டியது வரும் என்று கூறிய வனிதா விஜயகுமார் இப்போது, அந்த பையன் என்ன லவ் பண்றியா, இல்லை என் அப்பாவை லவ் பண்றியா என்று கேட்டான். சத்தியமா, நான் உன் அப்பாவை தான் லவ் பண்றேன் என்று அவனிடம் சொன்னேன் என்று கூறி மேலும் பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.
இளையராஜா ஏற்கனவே தனது இசையில் உருவான பாடல்களுக்கு காப்பிரைட் கேட்டு தமிழ் சினிமாவில் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் வனிதா விஜயகுமார் , இளையராஜா இசையில் உருவான ராத்திரி சிவராத்திரி பாடலை பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இளையராஜாவிடம் நேரில் சென்று அனுமதி கேட்டதற்கு ஓகே சொன்னார் என்று வனிதா விஜயகுமார் சொல்கிறார்.

ஆனால் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இளையராஜாவும் வனிதாவின் அப்பா நடிகர் விஜயகுமாரும் குடும்ப நண்பர்கள். நட்பு ரீதியாக பழகி இருக்கின்றனர். காதல் என்ற ரேஞ்சுக்கெல்லாம் அவரது பிள்ளைகள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா சென்றிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இளையராஜா வீட்டுக்கு மருமகளாக போக வேண்டும் என்பது ஒருவேளை வனிதாவின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம்.
இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா மிகவும் சீரியசான ஒரு நபராக இருப்பவர். பெண்களிடம் பேசவே சங்கோஜப்படுபவர். இளைய மகன் யுவன்தான் மற்றவர்களிடம் ஜோவியலாக பேசக்கூடியவர் என்பதால் ஒருவேளை யுவன், வனிதாவை விரும்பி இருக்கலாம். ஒரு கட்டத்தில் வனிதா, சினிமாவில் நடிக்க வந்து வாய்ப்புகள் அதிகரித்ததால் எதுக்கு இப்ப கல்யாணம் என்று வனிதாவின் அம்மா மஞ்சுளாகவும் மறுத்திருக்க வாய்ப்புள்ளது.
ஏனென்றால் மகளை திருமணம் செய்து அனுப்புவதைவிட பெரிய நடிகையாக்க வேண்டும் என்பதே மஞ்சுளாவின் கனவாக அப்போது இருந்தது. ஆனால் வனிதா நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. மற்றபடி வனிதாவை யுவன் சங்கர் ராஜா விரும்பினாரா இல்லையா என்பதே யாருக்கும் தெரியாது. வனிதா விஜயகுமார் தரப்பில் மட்டுமே இப்படி ஒரு எண்ணம் இருந்து அது பேச்சுவார்த்தையோடு முடிந்து போய் இருக்கலாம் என்றும் பலவிதமான கருத்துகளும் தகவல்களும் கோலிவுட் வட்டாரத்தில் வெளியாகி உள்ளது.
எதற்காக வனிதா விஜயகுமார், இளையராஜா இசையமைத்த ராத்திரி சிவராத்திரி பாடலை தனது படத்தில் பயன்படுத்த வேண்டும், அவர் தனது பாட்டு தேவை என்றால் முறையான அனுமதி பெற வேண்டும் என்று ஏற்கனவே சொல்லிவிட்டார். இளையராஜாவை தன் மகளுடன் நேரில் சந்தித்து அனுமதி வாங்கியதாக வனிதா விஜயகுமார் சொல்கிறார். ஆனால் அந்த பாட்டை பயன்படுத்த அதற்கான பணத்தை இளையராஜாவுக்கு வனிதா தந்தாரா என்று தெரியாது.
இளையராஜா தனது பாடல்களை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். அப்படி இருந்தும் எதற்காக அவரது பாட்டை வனிதா விஜயகுமார் பயன்படுத்த வேண்டும் என்று பலரும் விமர்சிக்கின்றனர். இளையராஜா – விஜயகுமார் குடும்பங்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் நல்ல பழக்கமும் நட்பும் இருந்துள்ளது. சம்பந்தம் பேசலாம் என திட்டமிட்டு அது ஒருவேளை நடக்காமல் போய் இருக்கலாம். இதைத்தான் வனிதா சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால் ஒரு விஷயம் சட்டபூர்வமாக அணுகப்பட்ட பின்பு இதையெல்லாம் வனிதா விஜயகுமார் பேச வேண்டிய அவசியமே இல்லை. இப்படி நெகிழ்ச்சியாக பேசுவது, சென்டிமென்ட் ஆக பேசுவது அல்லது அழுது ஆர்ப்பாட்டம் செய்வதால் எந்த பயனும் கிடையாது. இதெல்லாம் இளையராஜாவிடம் எடுபடாது. அவர் சென்டிமென்ட் பார்க்கிற ஆளே கிடையாது என்றும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

