தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனி கட்சி தொடங்க போகிறார் என்றெல்லாம் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் திட்டமிட்டு வதந்தியை பரப்பி வருகிறார்கள். இப்படி வதந்தியை பரப்பி வருவார்களின் நோக்கம், பாஜகவினர் மத்தியில் அவருடைய இமேஜை டேமேஜ் செய்ய வேண்டும் என்பது தான் என்றாலும் கூட, ஒரு வேலை அண்ணாமலை தனி கட்சி தொடங்கினால் அது தமிழக பாஜகவுக்கு மிக பெரிய சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதை டெல்லி பாஜக தலைமைக்கு நன்கு தெரியும்.
குறிப்பாக பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரால் உருவாக்கப்பட்ட அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் என்ன, அவருக்கு பிரதமர் மோடி குறித்த வாக்குறது என்ன என்கிற தகவல் டெல்லியில் இருந்து வெளியாகியுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் தலைவராக பாஜகவில் உருவெடுத்த பின்பு, பாஜகவின் முக்கிய தலைவர்கள் யாருமே பாஜகவை விட்டு பிரிந்து தனி கட்சி தொடங்க விட வில்லை.

இதற்கு முக்கிய காரணம், மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் அரவணைப்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த கால வரலாற்றில், கர்நாடகாவில் பாஜகவில் இருந்து பிரிந்து எடியூரப்பா தனிக்கட்சி தொடங்கிய பின்பு அங்கே பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது, அதே போன்று உத்திரபிரதேசத்தில் கல்யாண் சிங் பாஜகவில் இருந்து பிரிந்த பின்பு மிக பெரிய சரிவை அங்கே பாஜக சந்தித்தது.
டெல்லியில் மதன் லால் பாஜகவில் இருந்து பிரிந்த பின்பு டெல்லியில் பாஜக ஆட்சியை பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதே போன்று உமா பாரதி, சங்கர் சில சவேரா போன்ற தலைவர்கள் கடந்த காலங்களில் பாஜகவில் இருந்து பிரிந்து சென்றது பாஜகவில் மிக பெரிய சரிவை ஏற்படுத்திய வரலாறு உண்டு, அந்த வகையில் அதே போன்டர் ஒரு சூழல் தான் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகினாலும், தனிக்கட்சி தொடங்கினாலும் ஏற்படும் என்பது அரசியல் எதார்த்தம்.
அந்த வகையில் பிரதமர் நேரடியாகவே அண்ணாமலைக்கு சில வாக்குறுதிகளை அளித்துள்ளார், அதாவது உங்களுக்கு உழைப்பை நன்கு அறிவோம், உங்களால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாங்கிய 11 சதவிகித வாக்குகள் அடிப்படையில் அதிமுகவிடம் இருந்து தொகுதிகளை பெறுவோம், எந்த இடத்திலும் பாஜகவை விட்டு கொடுக்க மாட்டோம் என அன்னமலையை தட்டி கொடுத்து அரவணைத்துள்ளார் பிரதமர் மோடி என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
குறிப்பாக மதுரை வந்த அமித்சா மேடையில் அண்ணாமலை பெயரை குறிப்பிட்டதும் எழுந்த தொண்டர்கள் மத்தியில் உள்ள கரகோஷம், அதே போன்று முருக பக்தர் மாநாட்டில் அண்ணாமலை பேச தொடங்கியதும் எழுந்த கரகோஷம், இவை அனைத்தும் உளவு துறை மூலம் ரிப்போர்ட் ஆக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரின் கவனத்துக்கு சென்று கொண்டு தான் இருக்கிறது என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
அந்த வகையில் அண்ணாமலையை தவித்து தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முடியாது என்றும், அதே நேரத்தில் அண்ணாமலைக்கு பாஜகவில் முக்கியத்துவம் இல்லை என்றால், பாஜக பின்னோக்கி செல்லும் என்பதை நன்கு உணர்ந்த டெல்லி தலைமையும் பிரதமர் மோடியும் வரும் தேர்தலில் அண்ணாமலை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பாஜகவும் எந்த இடத்திலும் விட்டு கொடுக்காமல், எடப்பாடியை கட்டுக்குள் வைத்து கணிசமான தொகுதிகளை பெற்று போட்டியிடுவார்கள் என்றும் அதே நேரத்தில் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவதும் என்பது முற்றிலும் வதந்தி என்பதை உறுதி படுத்துகிறது டெல்லி வட்டாரங்கள்.
அதே நேரத்தில் வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் மாற்றம் குறித்து டெல்லி வட்டாரத்தில் விசாரித்ததில் வரும் 2031 வரை பிரதமராக மோடி தொடர்வார், வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை உறுதி படுத்துகிறது டெல்லி வட்டாரங்கள்.

