கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய், அவரது மனைவி சங்கீதா இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. முதலாவதாக லியோ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் நடிகை திரிஷா ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்த திரிஷா, ஒரு நெருக்கமான காட்சியில் விஜய்க்கு உதட்டில் முத்தம் தரும் லிப்லாக் காட்சியும் இருந்தது.
ஆரம்பத்தில் விஜய் திரிஷாவும் இணைந்து கில்லி ஆதி குருவி திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் அவர்களைப் பற்றிய கிசுகிசு வெளியானது. அதனால் திரிஷாவுடன் விஜயை நடிக்க வேண்டாம் என்று அவரது மனைவி சங்கீதா கண்டிசன் போட்டதாகவும் ஆனால் அதையும் மீறி லியோ படத்தில் திரிஷாவுடன் விஜய் நடித்ததால் பிரச்சனை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதிலும் அந்த படத்தில் லிப்லாக் முத்தக் காட்சியில் விஜயும் திரிஷாவும் மிகவும் நெருக்கமாக நடித்தது சங்கீதாவை மேலும் ஆத்திரமடையச் செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் லியோ படத்துக்கு முன்பாக விஜய் திரிஷா இருவரும் இணைந்து நடித்தபோது இருவருக்கும் நெருக்கமான நட்பு இருந்ததாகவும் அதுவும் சங்கீதாவை ஆவேசமடைய செய்துள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸை நடிகர் விஜய், திரிஷாவுக்கு வாங்கி கொடுத்ததாகவும் சில ஆண்டுகளுக்கு முன் தகவல் வெளியானது.
இந்த சூழலில் விஜய் திரிஷாவுடன் லியோ படத்தில் மீண்டும் இணைந்து நெருக்கமாக நடித்ததால் நடிகர் விஜயை, சங்கீதா பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் எந்த சண்டையும் பிரிவும் இல்லை. தங்களது மகளின் படிப்புக்காக சங்கீதா லண்டன் சென்று இருக்கிறார் என்றும் விஜய் தரப்பில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் சமீபத்தில் சத்தியபாமா கல்வி குழுமத்தின் நிறுவனர் ஜேப்பியாரின் பேத்தியின் திருமண வரவேற்பு விழா நடந்தது. ஜேப்பியார் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர் விஜய் மகிழ்ச்சியாக கலந்து கொண்டார். மினுமினுக்கும் பட்டு வேட்டி பட்டு சட்டையில் வந்த அவரது வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த திருமண வரவேற்பு விழாவிற்கு நடிகை சங்கீதாவும் தனியாக வந்து கலந்து கொண்டார்.
கணவன் மனைவி இருவரும் ஒரே திருமண நிகழ்ச்சிக்கு தனித்தனியாக வந்ததுதான் இப்போது இணையத்தில் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி என்றால் உண்மையிலேயே விஜய் சங்கீதா இருவரும் பிரிந்து தான் வாழ்கிறார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது வெறும் வாயை மெல்பவர்களுக்கு அவல் கிடைத்தது போல, விஜய் குறித்து விமர்சித்து பேச உதவுவது போல இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
விஜய் இப்போது முழு நேர அரசியலில் இறங்கி உள்ள நிலையில், அவர் சொந்த வாழ்க்கையில் கணவன், மனைவி இருவருக்கும் உள்ள பிரச்சனை பெரிய பூதாகரமாக மாறி இருக்கிறது. கணவன், மனைவிக்குள் ஒற்றுமை இல்லாத போது பிரிந்து வாழும் போது அரசியலில் இவரது பங்களிப்பு திருப்தியாக இருக்கப் போகிறதா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி கேட்க துவங்கி விட்டனர். இது தவெக தொண்டர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

