பிரதமரின் நேரடி பார்வையில் அண்ணாமலை… இணை அமைச்சர் பொறுப்பு… என்ன துறை தெரியுமா.?

0
Follow on Google News

கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி மாதம் 27, 28ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார். பிரதர் மோடி தமிழகம் வருவதற்கு முன்பே பல அரசியல் மாற்றங்கள் நிகழ இருக்கிறது என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது. அடுத்த இரு தினங்களில் பாஜகவின் தேசிய தலைவர் தேர்வு இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

குறிப்பாக பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசித் பெற்ற இடங்களுக்கு அவர் வந்து சென்ற பின்பே அந்த இடம் உலகப் புகழ்பெற்று மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வர காரணமாக இருக்கும், அந்த வகையில் சீன அதிபருடன் பிரதமர் மோடி மகாபலிபுரத்தில் நடத்திய சந்திப்புக்கு பின்பு இந்தியாவிலேயே அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடமாக மகாபலிபுரம் பிடித்துள்ளது.

இந்நிலையில் சோழ தேசத்திற்கு பிரதமர் மோடி வந்து சென்ற பின்பு தேசிய அளவில் அமைச்சரவையிலும் மாற்றம் இருக்கும் என்றும், பாஜக தேசிய பட்டியலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வரும் 2026 தேர்தலில் அண்ணாமலையின் பங்கு என்ன என்கின்ற கேள்வியும் விவாதமும் அதிகரித்து வருகிறது.

சமீபகாலமாகவே பெரும்பாலும் நடக்கும் பாஜக நிகழ்ச்சியில் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளாமல், தான் தனி மனிதன் என்றெல்லாம் பேட்டி அளித்து வருகிறார், மேலும் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியுள்ள சுற்றுப்பயணத்தில் பாஜக முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டாலும், அண்ணாமலை இதுவரை கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலையின் அடுத்த கட்ட அரசியல் என்ன என்கின்ற கேள்விகளுக்கு, தற்பொழுது டெல்லியில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது . மேலும் தற்பொழுது ஆர்எஸ்எஸ் இன் பங்கீடு அமைச்சரவையிலும் கட்சி பதவி கொடுப்பதிலும் தலையிட அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தேசிய தலைவர் தாமதத்திற்கும் அதுவே காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் அண்ணாமலை தமிழகத்தில் பிரச்சாரம் செய்யாமல் பாஜகவின் வாக்கு வங்கி அதிமுகவால் அறுவடை செய்ய முடியாத ஒரு அரசியல் சூழல் இருந்து வருகிறது. இது அதிமுகவினரே வெளிப்படையாக பல இடங்களில் ஒப்புக்கொண்டுள்ளன. பாஜகவின் தேசிய தலைவர் அறிவித்தவுடன் அடுத்து தேசிய பொதுச்செயலாளர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்படலாம் என்கின்ற தகவல் பரவலாக இருந்து வருகிறது

அதே நேரத்தில் மற்றொரு வாய்ப்பாக பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் பதவியும் அண்ணாமலைக்கு வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அப்படி இணையமைச்சர் பதவி அண்ணாமலைக்கு பிரதமர் அலுவலக தொடர்பாக வழங்கப்பட்டால் சிபிஐ தொடர்பான பல முக்கிய பைல்கள் அண்ணாமலை கைக்கு வந்து செல்லும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக தமிழகத்தில் திமுக ஆட்சியை கண்ணில் விரலை விட்டு ஆட்ட வேண்டும் என்றால் அண்ணாமலைக்கு பிரதமர் அலுவலகத்துறை இணை அமைச்சர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் அண்ணாமலைக்கு பிரதமர் அலுவலகத்தில் இணை அமைச்சர் அல்லது பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் இரண்டில் ஒன்று கிடைக்கும் என்று உறுதிப்படுத்துகிறது டெல்லி வட்டாரங்கள்.