பாஜக வேட்பாளர் பட்டியல் ரெடி… கோவையில் போட்டியிடும் அண்ணாமலை… என்ன தொகுதி தெரியுமா.?

0
Follow on Google News

இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு 10 மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. கூட்டணியை உறுதி செய்ய திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் தருவாயில் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தால் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இணக்கமான ஒரு சூழல் உருவாகாது என்பதால் சுமார் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார் அமித்ஷா.

தற்பொழுது அதிமுக – பாஜக கூட்டணி இணக்கமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 11 சதவிகித வாக்குகளை பெற்ற பாஜக இந்த முறை அதிமுக கூட்டணியில் எத்தனை சீட்டுகளில் போட்டியிட இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பு பாஜகவினர் மத்தியில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 40 முதல் 50 தொகுதிகள் வரை பாஜக போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள பகுதியாக முதல் இடத்தில் கொங்கு மணடலம் , அதற்கு அடுத்த இடத்தில் தென் மாவட்டம் உள்ளது. அந்த வகையில் கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டத்தில் முழுமையான வெற்றியை பெற வேண்டும் என்பதில் மிக தீவிரமாக அதிமுக – பாஜக இரண்டு கட்சிகளும் வேலை செய்து வருகிறது.

இந்நிலையில் தென் மாவட்டத்தில் , பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியிலும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த விஜயதாரணி விளவங்கோடு தொகுதியிலும், MR காந்தி நாகர்கோவில் தொகுதியிலும் பாஜக சார்பில் போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது. தென் மாவட்டத்தின் தலைநகரான மதுரையில் பாஜக இரண்டு அல்லது ஒரு தொகுதியில் போட்டியிடும் என கூறப்படுகிறது.

சங்க தமிழ் வளர்த்த மதுரையில் தாய்மொழி தமிழை கொண்ட அங்கே பெரும்பான்மையாக இருக்க கூடிய சமூகத்தில் இருந்து கடந்த சில வருடங்களாகவே மாநில அளவில் பாஜகவில் முக்கிய பொறுப்புகள் கொடுக்க பட வில்லை, இதனால் மதுரையில் பெரும்பான்மையாக இருக்கும் சமூகத்தை பாஜக புறக்கணிக்கிறதா என்கிற குமுறல் மதுரை மக்கள் மத்தியில் உண்டு, இதெல்லாம் கருத்தில் கொண்டு, எப்படி கொண்டு மண்டலத்தில் அங்கே பெரும்பானமையாக இருக்க கூடிய சமூகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன், அதே போன்று நாகர்கோவிலில் அங்கே பெரும்பான்மையாக இருக்க கூடிய சமூகத்தில் இருந்து MR காந்திக்கு பாஜக வாய்ப்பு கொடுத்ததோ, அதே போன்று மதுரையிலும் வரும் சட்டசபை தேர்தலில், அங்கே பெரும்பாண்மையாக இருக்கும் சமூகத்தினருக்கு மதிப்பளிக்கும் வகையில், அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு தான் பாஜகவில் சீட் என்பதில் பாஜக தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை வடக்கு, சிங்காநல்லூர், கவுண்டபாளையம் ஆகிய மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதி அண்ணாமலை போட்டியிடுவார் என்றும், அதில் கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவையில் 1 தொகுதியில் போட்டியிட்ட பாஜக இம்முறை இரண்டு தொகுதியில் போட்டியிடும் என்றும், அதில் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், மற்றொன்று கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுவார் என கூறப்படுகிறது.