திராவிட ஏஜெண்டுகள் களையெடுப்பு… டெல்லியில் இருந்து வந்த உத்தரவு… பாஜகவில் இனி இவர்களுக்கு இடமில்லை…

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை பதவி காலம் முடித்ததை தொடர்ந்து, அடுத்த பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அடுத்து மாநில நிர்வாக பட்டியல் வெளியாவதில் கால தாமதமாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாநில நிர்வாக பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்புள்ளது, ஏன் காலதாமதமாகி வருகிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக மாநில துணை தலைவர், பொதுச் செயலாளர், செயலாளர் , பொருளாளர் அடங்கிய பட்டியலை தமிழக பாஜக தலைமை டெல்லி கவனத்துக்கு எடுத்து சென்று இருக்கிறது, டெல்லி தலைமையும் ஒப்புதலை வழங்கிய நிலையில், எந்த நேரத்திலும் மாநில நிர்வாக பட்டியல் வெளியாகலாம் என்கிற பரபரப்புக்கு, மத்தியில் மாநில நிர்வாக பட்டியலை தமிழக பாஜக தலைமை தயார் செய்வதற்கு முன்பு டெல்லியில் இருந்து வந்த உத்தரவு என்ன என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது மாநில நிர்வாக பட்டியலை தமிழக பாஜக தலைமை தயார் செய்வதற்கு முன்பு டெல்லி தலைமை சில வழிகாட்டுத்தலை தெரிவித்து இருக்கிறது, அதில் குறிப்பிட்டு சிலர் பெயரை குறிப்பிட்டு இவர்களுக்கெல்லாம் ஓய்வு கொடுங்க, மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்கிற உத்தரவு டெல்லியில் இருந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவில் மாநில அளவில் உயர் பதவியை பெற்று கொண்டு, பாஜகவின் வளர்ச்சிக்கு ஒரு சதவிகிதம் கூட உழைப்பை கொடுக்காமல், தன்னுடைய பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டு, திமுக அமைச்சருடன் கள்ள தொடர்பை ஏற்படுத்தி கொண்டு திராவிட ஏஜெண்டுகளாக செயல்பட்டு அந்த திராவிட ஏஜெண்டுகளுக்கு மீண்டும் மாநில அளவில் பொறுப்பு கொடுக்க வேண்டாம் என்றும், அவர்களை ஓரம் காட்டுங்கள் என சில பெயர்களை குறிப்பிட்டு இவர்களுக்கெல்லாம் பொறுப்பு வழங்க கூடாது என டெல்லி தலைமை உத்தரவு போட்டதாக கூறப்படுகிறது.

அதாவது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாஜக டெல்லி தலைமை, தனியார் ஏஜென்சி மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பாஜக முக்கிய தலைவர்கள் குறித்து தகவலை சேகரித்து இருக்கிறது, அதில் துங்கா நகரம் என்று சொல்ல கூடிய சொந்த மாவட்டத்தில் உள்ள திமுக அமைச்சர்களுடன் கள்ள தொடர்பை ஏற்படுத்தி கொண்டு, அந்த மாவட்டத்தில் திமுக அமைச்சருக்கு எதிராக வேலை செய்யாமல், திராவிட ஏஜெண்டாக செய்யப்பட்ட முக்கிய பாஜக புள்ளி குறித்த தகவல் டெல்லி தலைமைக்கு சென்று இருக்கிறது.

மேலும் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே, பாஜக எந்த தொகுதியில் நிற்க போகிறது, யார் வேட்பாளர் என தெரியாத போதும், நான் தான் இந்த தொகுதியில் நிற்க போகிறேன், அமித்ஷாவே சொல்லிவிட்டார், என்றெல்லாம் கப்சா விட்டு தொழில் அதிபர்களிடம் வசூல் வேட்டை நடத்தியது, மற்றும் சொந்த மாவட்டத்தில் துடிப்புடன் வேலை செய்யும் பாஜகவினரை தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை ஓரம் கட்டுவது இப்படி பல புகார்கள் திராவிட ஏஜெண்டாக செயல்பட்டவர் மீது டெல்லிக்கு தனியார் ஏஜென்சி மூலம் சென்று இருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்து போன்ற திராவிட ஏஜென்ட் சில பெயர் அடங்கிய பட்டியலை தமிழக பாஜக தலைமைக்கு அனுப்பி வைத்த டெல்லி பாஜக தலைமை, இவர்கேளுக்கெல்லாம் கட்சியில் பொறுப்பும் வழங்க கூடாது, வரும் சட்டசபை தேர்தலில் சீட்டும் வழங்க கூடாது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அந்த திராவிட ஏஜென்ட் இருக்கும் சொந்த மாவட்டத்தில் ஒரு துடிப்பு மிக்க இளைஞரை பாஜக மாவட்ட தலைவராக நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்த போது, அந்த இளைஞனுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது, என அந்த திராவிட ஏஜென்ட் எதிர்ப்பை மீறி மாவட்ட தலைவராக நியமித்தது தமிழக பாஜக தலைமை. ஆனால் அந்த துடிப்பு மிக்க இளைஞன் மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற குறுகிய காலத்திலே சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல் மாவட்டம் என்கிற பெருமையை தட்டி சென்றது அந்த திராவிட ஏஜென்ட்க்கு முக்குடைப்பு சம்பவமாக அமைத்தது.