ஆளுநர் RN ராவி அவசர ஆலோசனை… திமுகவுக்கு எதிரான ஆபரேஷன்… இறுதி அஸ்திரத்தை கையில் எடுத்த டெல்லி…

0
Follow on Google News

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தமிழக ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டதே திமுக அரசை ஓட ஓட விரட்ட வேண்டும் என்பதற்காக தான் மத்திய பாஜக அரசு இதை செய்தது. எப்படி புதுசேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயண சாமியை அப்போது ஆளுநராக இருந்த கிரண் பேடி ஓட ஓட விரட்டனாரோ அதே போன்று தமிழ்கத்தில் திமுகவுக்கு மிக பெரிய சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்றார் ஆர் என் ரவி என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

இந்நிலையில் புதுசேரியின் கவர்னராக இருந்த கிரண் பேடியின் ஆப்பரேஷன் வெளிப்படையாக தெரியும், ஆனால் தமிழக ஆளுநராக இருக்கும் RN ரவி ஆப்பரேஷன் சைலெண்டாக இருக்கும் என்றும், அந்த வகையில் திமுகவுக்கு எதிராக மிக பெரிய ஆபரேஷனை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தொடங்கிவிட்டார் என்கிறது டெல்லி வட்டாரங்கள். குறிப்பாக ஆளுநர் ஆர் என் ரவியை சீண்டும் வகையில் திமுக நடந்து கொண்ட சில விஷயங்கள், திமுகவுக்கு தான் யார் என்று பாடம் புகட்ட வேண்டும் என தனிப்பட்ட முறையிலும் ஆளுநர் திமுகவுக்கு எதிரான தன்னுடைய ஆபரேஷனை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்னும் சட்டசபை தேர்தலுக்கு 10 மாதங்களே உள்ள நிலையில், அவசரமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, அங்கே முக்கிய அரசு அதிகாரிகளை சந்தித்து வருகிறார், மேலும் முக்கிய IAS அதிகாரிகளையும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முழுக்க முழுக்க திமுக அரசு தொடர்பான ஆலோசனை என்று கூறப்படுகிறது.

தற்பொழுது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவல் இடத்திற்கு தமிழக ஆளுநர் ஆர் ரவி வர இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தற்பொழுது ஆர் என் ரவி வகித்து வரும் தமிழக ஆளுநர் பொறுப்பு முடிந்ததும் அடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்க்க இருப்பதாக டெல்லியில் இருந்து வரும் தகவல் உறுதி படுத்துகிறது. ஆனால் அதற்குள் திமுக அரசை முடிவுக்கு கொண்டு வரும் இறுதி கட்ட வேலையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆர் என் ரவி ஏற்கனவே, சிபிஐ அதிகாரியாகவும், தேசிய பாதுகாப்பு இணை ஆலோசகராகவும் பணியாற்றிவர், குறிப்பாக இந்திய உளவுத்துறையில் அனுபவம் வாய்ந்தவர். இந்நிலையில் கடந்த நான்கு வருட திமுக ஆட்சியில், நடந்த முறைகேடுகள், மற்றும் திமுக அமைச்சர்கள் வாங்கிய புதிய சொத்துக்கள், மற்றும் திமுக ஆட்சியில் நிர்வாக ரீதியாக நடந்த முறைகேடுகள் அனைத்தும் தகவலும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கையில் உள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது டெல்லி பாஜக, அந்த வகையில் திமுகவுக்கு எதிராக மொத்த அஸ்திரத்தையும் கையில் எடுக்க முடிவு செய்த பாஜக, திமுக ஆட்சி மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்கள் மனநிலையில் திமுக மாற்றி விட கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறது பாஜக அரசு.

அந்த வகையில் திமுக கஜானா என்று சொல்ல கூடிய அமைச்சர்களை குறிவைத்து கடந்த 2025 ஜனவரி மாதம் தொடங்கியே அமலாக்க துறை சோதனை அதிரடியாக நடந்து வருகிறது. இது தேர்தல் செலவுக்காக திமுகவுக்கு வரும் நிதியை லாக் செய்யும் வேலையாக ஒரு பக்கம் மத்திய அரசு செய்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்பொழுது தமிழக ஆளுநர் ஆர் என் ரவியும் அவருக்கு கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் திமுக அரசுக்கு எதிரான ஆப்பரேஷனை சைலெண்டாக தொடங்கியுள்ளார், அதற்காக தான் டெல்லியில் உள்ள அதிகாரிகள் மற்றும் முக்கிய IAS அதிகாரிகளை சந்தித்து வருகிறார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.