ஆதவ் அர்ஜுனாவை விரட்டியடித்த அமித்ஷா … நீ திமுக ஸ்லீப்பர் செல் … டெல்லியில் அரங்கேறிய சம்பவம்…

0
Follow on Google News

கரூர் சம்பத்துக்கு பின்பு ஆளும் திமுக அரசு தமிழக வெற்றி கழகத்துக்கு மிக கடுமையான நெருக்கடியை கொடுத்து வருகிறது. ஆனால், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் போன்ற தவெக இரண்டாம் கட்ட தலைவர்களை கைது செய்ய தீவிரம் காட்டும் திமுக அரசாங்கம் , தவெக வில் முக்கிய தலைவராக இருக்கும் ஆதவ அர்ஜுனாவை கைது செய்வதில் தீவிரம் காட்ட வில்லை, இது தவெக தொண்டர்களுக்கே மிக பெரிய சந்தேகத்தை ஆதவா அர்ஜுனா மீது ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் தவெக நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், விஜய் அமைதியாக இருந்து வருவது, இனி இவர் அரசியலில் இருந்து பின்வாங்க போகிறாரா என்கிற கேள்விக்கு, அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது, அதாவது ரஜினி போன்று அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று கடைசி நேரத்தில் பயந்து ஓடியது போன்று விஜய் ஓட மாட்டார்.

விஜய் அரசியலில் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டார், குறிப்பாக கரூர் சம்பவத்துக்கு பின்பு இன்னும் மிக அவருடைய அரசியலை தீவிரம் காட்ட முடிவு செய்து இருக்கிறார், ஆனால் அதற்கு முன்பு, தற்பொழுது கோபத்தையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்தும் நேரம் இது இல்லை, சட்ட ரீதியாக தன்னுடைய தவெக நிர்வாகிகளை எப்படி காப்பாற்றுவது என்பதற்கான வேளையில் இறங்கி இருக்கிறார் விஜய்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் அணைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து விஜய்க்கு எதிராக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள், இப்படி ஒரு இக்கட்டான சூழலில் விஜய் இனி தனியாக நின்று திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது, குறிப்பாக இதுவரை அதிமுக – பாஜக கூட்டணிக்கு விஜய் தேவை இருந்து வந்தது, ஆனால் தற்பொழுது விஜய்க்கு அதிமுக – பாஜக கூட்டணி தேவை என்கிற சூழல் உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில், பாஜக உடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு விஜய் கதுவுகளை திறந்து வைத்துள்ள நிலையில், தொடர்ந்து டெல்லி பாஜக தலைமை விஜய்யிடம் நடத்திய கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றதை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா தொலைபேசியில் விஜய்யிடம் பேசி கூட்டணியை உறுதி செய்து இருக்கிறார், இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் நமக்கு ஒரே எதிரி திமுக தான் என பாஜகவுடன் கை கோர்த்து பேச இருக்கிறார்.

இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா தற்பொழுது உத்தரகாண்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கிருந்து தவெக – பாஜக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்து இருக்கிறார், இந்த தகவல் உள்துறை அமைச்சகம் மூலமாக அமித்ஷா கவனத்திற்கு சென்று இருக்கிறது.

ஆனால் ஆதவ அர்ஜுனாவை சந்திக்க அமித்ஷா மறுத்து விட்டதாக டெல்லி வட்டாரங்கள் உறுதி படுத்துகிறது. ஆதவ் அர்ஜுனா தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மருமகன் உடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், அவர் திமுகவின் சிலீப்பர் செல் போன்று தான் விஜய் உடன் இருந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார், தற்பொழுது கூட ஆழம் பார்ப்பதற்கு கூட அமித்ஷாவை சந்திக்க ஆதவ் அர்ஜுனா முயற்சிக்கலாம் என்கிற உளவு துறை ரிப்போர்ட்டை கருத்தில் கொண்டு தான் ஆதவ அர்ஜுனாவை சந்திக்க அமித்ஷா மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் கூட்டணி குறித்து மற்ற விவகாரம் எதுவாக இருந்தாலும், நேரடியாக விஜய் உடனே பேசலாம் என டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல் உறுதி படுத்துகிறது.