கரூர் சம்பவத்திற்கு பின்பு திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை தவிர மற்ற அனைத்து திமுக கூட்டணி கட்சிகளும் விஜய்க்கு எதிராக மிக கடுமையாக பேசி வருவதின் பின்னணியில், திமுக நேரடியாக விஜயை தாக்காமல் கூட்டணி கட்சியை தூண்டி விடுவது தான் பின்னணி காரணம் என கூறப்படுகிறது. அதாவது திமுக இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று வெளியில் பேசி கொண்டாலும்,
மறைமுகமாக கூட்டணி காட்சிகளை தூண்டி விட்டு, கரூர் சம்பவத்தில் விஜய் தான் முதல் குற்றவாளி என்பது போன்று ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சித்து வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் திமுகவின் இந்த செயல் விஜய்க்கு மக்கள் மத்தியில் அனுதாபத்தை தான் ஏற்படுத்தி கொடுத்து இருப்பதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் விஜய்க்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளின் விமர்சனம் விஜயை அதிமுக பாஜக கூட்டணிக்கு தள்ளும் சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் திமுக மீது ஏற்கனவே மக்கள் கடும் அதிர்ச்சியில் இருந்து வரும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணியில் விஜய் இணைந்தால் வரும் 2026 சட்டசபை தேர்தலில் எப்படி கடந்த 2011 சட்டசபை தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்ததோ அதேபோன்று சூழல் உருவாகும்.
திமுக கூட்டணி சுமார் 25 முதல் 50 தொகுதிக்குள் மட்டுமே திமுக வெற்றி பெறும் என்றும், விஜய் பாஜக அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அரசியல் விமர்சனங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள், இந்த நிலையில் கரூரில் விவகாரம் குறித்து அமித்ஷாவிடம் விஜய் ஆலோசனை நடத்தியதாகவும் , அப்போது தன்னிடம் திமுக அரசுக்கு எதிராக பல ஆதாரங்கள் இருப்பதாக விஜய் அமிர்தாவிடம் தெரிவித்ததாக தெரிவித்து இருக்கிறார்.
விரைவில் அமித்ஷாவை நேரில் சந்தித்து இது குறித்து விஜய் விளக்க கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அமித்ஷாவுக்கு இரண்டு பக்கத்தில் கரூர் விவகாரம் குறித்து கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் கரூர் சம்பவம் குறித்து பல பகிர் தகவல்கள் அடங்கியிருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கடிதம் வெளியே லீக் ஆனாலே திமுக அரசுக்கு எதிராக மிகப்பெரிய பலத்த அடி விழும் என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு ஆளுநர் ஆர் என் ரவி கரூர் விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக பல பல திடுக்கிடும் தகவல்களை குறிப்பிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் தற்பொழுது கரூரில் சட்ட ஒழுங்கு பிரச்சனை சீராக இல்லை என விஜய் உணர்வதால் தான், அவர் இன்னும் கரூருக்கு பாதிக்கப்பட்டவர்களை சென்று நேரில் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் கரூர் சம்பவத்துடன் முடங்கி போக மாட்டார் என்றும், ஆனால் அவருடைய பிரச்சார யுக்தியை மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி ஒரே இடத்தில் இருந்து பிரச்சாரம் செய்யாமல் தமிழகம் முழுவதும் யாத்திரை போன்று தொடர் பயணத்தை விஜய் மேற்கொண்டு மக்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகிறது. இந்த பிரச்சார யுக்தி கூட அமித்சாவிடம் பேசி பின்பு , அமித்ஷா விஜய்க்கு கொடுத்த சில டிப்ஸ் காரணமாக எடுத்த முடிவு என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது 2026 தேர்தலில் துணை முதல்வரை நோக்கி நகரும் விஜய் 2031 இல் தான் தனித்துப் போட்டியிட்டு முதல்வராகலாம் என்ற திட்டத்தில் இருப்பதால், விரைவில் பாஜக அதிமுக கூட்டணியில் விஜய் இணைவது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

