கரூரில் நடந்த விஜய் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 க்கு மேற்பட்டவர்கள் உயிர் இழந்த நிலையில், இதுவரை இதனால் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என்கிற விமர்சனம் ஒரு பக்கம் இருந்து வரும் நிலையில், விஜய் நேரில் சென்றால், இன்னும் நிலைமை மோசமாகும், வகையில் விஜய் நாட்கள் கடந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பது தான் சிறந்தது என சிலர் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சினிமா துறையை சேர்ந்தவர்கள், இந்த விவகாரத்தில் விஜய்க்கு எதிராக ஒரு தரப்பினரும், விஜய்க்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கரூர் சம்பவம் அரங்கேறி சில மணி நேரத்தில் விஜய்யை கைது செய்யுங்கள் என்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டார் நடிகை ஓவியா. அதை சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார். இருந்தாலும் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பலரும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு ஓவியாவுக்கு தைரியத்தை பார்த்தீங்களா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஓவியாவின் இன்ஸ்டா ஸ்டோரியை பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை திட்ட ஆரம்பித்தார்கள். இந்நிலையில் தன்னை தகாத வார்த்தைகளால் விஜய் ரசிகர்கள் அசிங்க அசிங்கமாக திட்டுவதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதையும் இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டார் ஓவியா. ஒரு பெண்ணை இப்படித் தான் அசிங்கமாக விமர்சிப்பதா என்று ஓவியாவுக்கு ஆதரவாக அவரின் ரசிகர்கள் குரல் கொடுத்தார்கள்.
இதனை தொடர்ந்து ஒரு அணிலின் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் போஸ்ட் செய்த ஓவியா, அணிலின் புது டயட் குறித்து கேள்விப்பட்டீர்களா?. அது வெறும் நட்ஸ் என்று தெரிவித்திருந்தது விஜய் ரசிகர்களை மேலும் கோபம் அடைய செய்துள்ளது, இதனால் ஓவியாவை கண்டபடி விமர்சனம் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், சமீபத்தில் விஜய்யை விமர்சித்து பேசி இருந்தார். அதில் விஜய்யின் பாடிகார்டுகள் விஜய்யின் வேனில் இருந்து ஒரு தவெக தொண்டரை தூக்கி வீசிய வீடியோவை பற்றி பேசிய அவர், உங்கள் தொண்டனை பார்த்து பயப்படாதீர்கள். தொண்டர்களை பார்த்து பயப்படுபவர்கள் உண்மையான தலைவனே இல்லை.
தொண்டர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பவன் தான் உண்மையான தலைவன். மக்களை ஆள வேண்டும் என நினைப்பவர் உண்மையான தலைவன் கிடையாது. மக்களுக்காக பல வருடங்களாக வாழ்பவர் தான் உண்மையான தலைவன் என பேசி சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் பேசி இருந்தார். விஜய்யை நோக்கி வரும் தொண்டர்களை பாதுகாவலர்கள் தடுக்கவில்லை என்றால் விஜய்யை எப்படி பாதுகாப்பது என்கிற அடிப்படை புரிதல் இல்லாமல் சத்யராஜ் மகள் பேசுவதாக பலரும் பதிலடி கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் சத்யராஜ் மகன் சிபிராஜ், விஜய் நடித்த ஒரு படத்தில் வந்த ஒரு வசனத்தை தற்போது நிலவும் சூழ்நிலையை வைத்து காட்சிப்படுத்தியுள்ளார். அதில் “என்ன மட்டும் இல்ல… என்னோட இமேஜையும் உங்கக்கிட்ட ஒண்ணும் பண்ண முடியாது” என இன்ஸ்ட்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு அவர் தனது சமூக வலைதளத்தில் போட்ட பதிவு, விஜய்க்கு ஒற்றைமனதாக ஆதரவு அளிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

