சமீபத்தில் குஜராத் அமைச்சர்கள் மொத்தமாக ராஜினாமா செய்யப்பட்டு, அமைச்சரவை கூண்டோடு கலைக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்நிலையில் குஜராத் அமைச்சரவை கூண்டோடு கலைக்கப்பட்டு, பின்னணியில் மோடி போடும் புதிய கணக்கும், அமிதாஷாவின் அரசியல் வியூகம் என்ன என்கிற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
குஜராத்தில் சுமார் 30 வருடங்களாக தொடர்ந்து பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது, அதாவது காங்கிரஸ் தொடர்ந்து இரண்டு முறை எந்த மாநிலத்தில் தோல்வியை தழுவினாலும், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்த வரலாறு கிடையாது, அதே போன்ற ஒரு நிலை தான், குஜராத்திலும் காங்கிரஸுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் குஜராத் முதல்வராக 2002 முதல் 2014 வரை மோடி இருந்த வரை, பாஜக எந்த வகையிலும் வீழ்ச்சியை சந்திக்க வில்லை, ஆனால் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு, குஜராத் முதல்வராக ஆனந்த் தீவ் பட்டேல் பொறுப்பேற்ற பின்பு குஜராத்தில் பாஜக மிக பெரிய சரிவை சந்திக்க நேரிட்டது, அடுத்து நடந்த 2017 சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 182 சட்டசபை தொகுதிகளில் பாஜக சுமார் 150க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெரும் என சூளுரைத்தனர்.
ஆனால் தேர்தல் நெருக்கத்தில், பாஜக வெற்றி பெறுவதே கடினம் என்கிற உளவுத்துறை ரிப்போர்ட் அமித்சா மற்றும் மோடி இருவருக்கும் சென்றதை தொடர்ந்து குஜராத்தில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கினார்கள் மோடி மற்றும் அமித்சா இருவரும், அப்படி இருந்தும் தோல்வியின் விளிம்புக்கு சென்று, நுனி இலையில் வெறும் 99 தொகுதிகளை மட்டுமே பெற்று ஆட்சியை பிடித்தது பாஜக.
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், பாஜக தோல்வியை தழுவினால், அது அடுத்தடுத்து இந்தியா முழுவதும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பாஜகவை வீழ்ச்சி அடைய செய்துவிடும் என்பதை நன்கு புரிந்து கொண்டு, மோடி மற்றும் அமித்ஷா ஆகிய இருவருமே குஜராத் அரசியலில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்பொழுது சமீபத்தில் குஜராத் அமைச்சர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றசாட்டு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில், இதே அமைச்சர்கள் தொடர்ந்தால், அடுத்து வரும் குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக பலத்த அடி வாங்கும் என்கிற உளவுத்துறை ரிப்போர்ட் பிரதமர் மோடியின் கவனத்துக்கு சென்று இருக்கிறது.
இதனை தொடர்ந்து பாஜக உயர் மட்ட குழு அவசரமாக கூடியது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமைச்சரவை மாற்றம் செய்ந்தால் எந்த பயனும் இல்லை, அதனால் தேர்தலுக்கு சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்பே அமைச்சரவையை கூண்டோடு மாற்றி அமைக்க முடிவு செய்த பாஜக டெல்லி தலைமை , மற்றும் ஆர் எஸ் எஸ்,, குஜராத் முதல்வரையும் மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷாவை குஜராத் முதல்வராக அமர்த்த முடிவு எடுத்து இருக்கிறது.
ஆனால் அமித்சாவை மத்திய உள்துறை அமைச்சரில் இருந்து விட்டு கொடுக்காத மோடி, தன்னுடன் தான் அமித்சா இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் மோடி, இதனை தொடர்ந்து குஜராத்தில் அமைச்சரவை மட்டும் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டு, முதல்வர் பதவியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றாலும் குஜராத் முதல்வர் முதல் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் வரை அமித்ஸாவின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

