அதிரி புதிரி வசூவ்…. தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் பிரதீப் ரங்கநாதன்… மொத்தம் எத்தனை கோடி தெரியுமா.?

0
Follow on Google News

டியூட் படம் வெளியான முதல் நாளிலிருந்து திரையரங்கங்கள் முழுவதும் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சிங்கின் ஸ்கிரீனிலிருந்து மல்டிபிளக்ஸ் வரை படத்திற்கு எதிர்பாராத அளவுக்கு வரவேற்பும் கிடைத்தது. படம் வெளியான முதல் நாளில் சுமார் 20 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. 2ம் நாள் மற்றும் 3ம் நாள் வரை வசூலில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் ஃபேமிலி ஆடியன்ஸ் வருகையால் அவர்கள் தந்த ஆதரவால் மீண்டும் வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது.

மொத்தத்தில் டியூட் படம் 4 நாட்களில் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமான கோமாளி படம் மூலம் தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். அடுத்து நாயகனாக அவர் நடித்த லவ் டுடே படம் அவரை பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. அதன்பிறகு டிராகன் படமும் அவருக்கு ஒரு முக்கிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்போது டியூட் படம் மூலம் அவர் மீண்டும் தன்னை ஒரு வெற்றி நடிகராக நிரூபித்துள்ளார்.

லவ் டுடே டிராகன் படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்தது போல டியூட் படமும் இன்னும் சில தினங்களுக்குள் 100 கோடி ரூபாய் கிளப்பை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 3வது பாக்ஸ் ஆபிஸ் வெற்றி என்பதில் ஐயமில்லை என்கின்றனர். டியூட் படம் ஒரு லைட் ஹார்ட்டட் யூத் என்டர்டெயினராக இருந்தாலும் அதில் பல சமூக மற்றும் மனநிலை சார்ந்த அம்சங்கள் பேசப்படுகின்றன. படத்தின் மையக்கரு டிஜிட்டல் தலைமுறையின் உறவுகள் மற்றும் மன அழுத்தம் என்பதை குறிப்பாக பேசுகிறது.

பிரதீப் ரங்கநாதன்ஒரு இளைஞராக வாழ்க்கையின் அர்த்தம், காதல், தன்னம்பிக்கை ஆகியவற்றை தேடிச் செல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருக்க்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்துக்கு பெரிய பலமாக அமைந்துள்ளன. குறிப்பாக என்ன டியூட் நீங்க…என்று தொடங்கும் பாடல் இணையத்தில் வைரலாகி உள்ளது. திரைப்பட வணிக நிபுணர்கள் வெளியிட்ட தரவுகளின்படி முதல் நாளில் இந்திய வசூலில் 20 கோடி ரூபாயும், உலக அளவில் 25 கோடி ரூபாய் என மொத்தம் 45 கோடி வசூலித்துள்ளது.

அடுத்து 2ம் நாளில் இந்திய அளவில் 15 கோடி ரூபாய் உலக அளவில் 10 கோடி ரூபாய் என மொத்தம் 25 கோடி ரூபாயும் 3ம் நாளில் இந்திய அளவில் 7 கோடி ரூபாய் உலக அளவில் 3 கோடி ரூபாய் என மொத்தம் 10 கோடி ரூபாயும் 4ம் நாளில் இந்திய அளவில் 47 கோடி உலக அளவில் 43 கோடி என மொத்தம் 80 கோடி ரூபாய் கடந்து இந்த படம் சென்று கொண்டிருக்கிறது. ஒரு நடுத்தர படத்திற்கு இவ்வளவு பெரிய வசூல் என்பது சாதனையாக பார்க்கப்படுகிறது. ஒரு சாதாரண காமெடி படம் போல தொடர்ந்தாலும் 2ம் பாதியில் பிரதாப் ஒரு எழுச்சி உரையை காட்டுகிறார்.

அவர் தற்போது தமிழ் சினிமாவின் யூத் ஐகான் போல் இருக்கிறார். இன்றைய தமிழ் சினிமாவில் யூத் கனெக்ட் என்ற வார்த்தைக்கு பிரதீப் ரங்கநாதனே முகம் எனலாம். அவர் கதையில் நகைச்சுவை, உண்மை உணர்வு மற்றும் சமூக மெசேஜ் மூன்றையும் இணைக்கும் திறமையால் தனித்துவமான ரசிகர்களை பெற்றுள்ளார். கடந்த வாரம் டியூட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் இருந்த போதிலும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக இன்றும் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

தனது படங்கள் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, நான் படங்களை வெற்றி பெறச் செய்வதற்காக எழுதவில்லை. என் வயதினருக்கு பேசணும் என்றுதான் எழுதுகிறேன். அதுதான் அவர்களோடு எனக்கான நெருக்கம் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்ன அந்த நெருக்கமே இப்போது பாக்ஸ் ஆபிஸில் டியூட் படத்தின் வசூல் 80 கோடி ரூபாயாக மாறியிருக்கிறது. இன்னும் சில நாட்களில் டியூட் படம் 100 கோடி வருவாயை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கோமாளி லவ்டுடே டிராகன் டியூட் என தொடர் வெற்றிகளை தந்து இயக்குனராக நடிகராக பிரதீப் ரங்கநாதன் ஜெயித்திருக்கிறார்.