திமுக அரசின் அலட்சியம்… கண் கலங்கும் விவசாயிகள்,… மனதை உருக்கும் சம்பவம்…

0
Follow on Google News

குருவை சாகுபடி அறுவடை முடிந்த நிலையில், காவேரி பாசன டெல்டா பகுதிகள், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அறுவடை செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான நெல் தேங்கி கிடக்கிறது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் என்று அழைக்கபடும் TNCSC சரியான திட்டமிடல் இல்லாததே தான், நெல் கொள்முதல் செய்வதில் மிக பெரிய தாமதம் ஏற்படுவதாக டெல்ட்டா பகுதி விவசாயிகள் குற்றசாட்டுகளை வைக்கிறார்கள்.

இந்த வருடம் சுமார் 6.31 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை சாகுபடி மேற்கொண்டனர் விவசாயிகள், இது வழக்கமான 3.87 லட்சம் ஏக்கரில் இருந்து அதிகம். இப்படி வழக்கத்துக்கு மாறாக விவசாயிகள் சாகுபடி செய்தாலும், கொள்முதல் தாமதம் காரணமாக விவசாயிகள் அரும்பாடு பட்டு விவசாயம் செத்தாலும் நெல்கள் தேங்கி கிடக்கும் அவல நிலை தான் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட 70% பயிரில், 40% மட்டுமே TNCSC ஆல் எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கொள்முதல் மையங்கள் என்று அழைக்கப்படும் DPC முழுமையாக செயப்படுத்தாத காரணத்தினால், நெல் திறந்தவெளிகளில் சேமிக்கப்பட்டு, மிக பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. போதுமான லாரி இல்லாததால், DPC-களில் இருந்து கிடங்குகளுக்கு நெல் கொண்டு செல்வதில் மிக பெரிய தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் சாக்கு பை பற்றாக்குறை காரணமாக, மேற்கு வங்கத்தில் இருந்து புதிய சாக்கு பை வருகிறது என்று அறிவிக்கப்பட்டாலும் கூட, தொடர்ந்து கடுமையான சாக்கு பற்றாக்குறையால், நெல் கொள்முதல் தடை பட்டுள்ளது. இரண்டு முறை TNCSC நிர்வாக இயக்குனர்கள் இடமாற்றம் காரணமாக, நிர்வாகமே மிக பெரிய அளவில் சீர்குலைத்து இருப்பதாக கூறப்படும் நிலையில் , இதுவே நெல் கொள்முதல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.

நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தினால், தேங்கி கிடக்கும் நெல் இருப்புகள், தற்பொழுது பெய்ந்து வரும் தொடர் மலை காரணமாக, ஈரப்பதம் ஏற்பட்டு, பல மையங்களில் நெல் முளைக்கு நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் விவசாயிகள் நலனில் தொடர்ந்து திமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில்,

இது இப்போது மட்டுமில்லை, ஒவ்வொரு பருவத்திலும், நெல் கொள்முதல் தொடர்பாக தொடர்ந்து விவசாயிகள் பிரச்சனையை எதிர் கொண்டு வருவதாகவும், இதற்கு, திமுக அரசாங்கத்தின் மோசமாக திட்டமிடல் தான் என தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள். இந்நிலையில் ஒவ்வொரு பஞ்சாயத்து ஒன்றியத்திலும் தானிய கிடங்குகளை நிறுவுவதாக திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதி கொடுத்தது என்ன ஆயிற்று என்கிறார்கள் விவசாயிகள்.

மாதக்கணக்கில் வயல்களில் பாடுபட்டு அறுவடை செய்த நெல்களை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுவது, விவசாயிகளை மிக கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறது. மேலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதால் மேலும் சேதத்தைத் தடுக்க இனிமேலாவது உடனடியாக நெல் கொள்முதலை அரசு விரைவுபடுத்து மாறு அரசாங்கத்தை மன்றாடி கேட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திமுக அரசின் அலட்சியம் மற்றும் திறமையின்மை காரணமாக, அறுவடை செய்யப்பட்ட நெல் மழையில் நனைந்து வருவது விவசாயிகளை கண்கலங்க வைத்துள்ளது.