விஜய் முகத்தை பார்க்க கூட விரும்பாத சங்கீதா…. கிழியும் விஜய் முகத்திரை… முடிவுக்கு வருகிறது பொது வாழ்க்கை…

0
Follow on Google News

பல ஆண்டுகளாக நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள பங்களாவில் தனித்து வாழ்வதாகவும் அவரது மனைவி சங்கீதா கடந்த சில ஆண்டுகளாக அவரை பிரிந்து சென்று லண்டனில் தனித்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது, மேலும் சங்கீதாவுடன் மகள் திவ்யா சாஷாவும் இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சென்னையில் இருந்தாலும் அப்பா விஜயை நேரில் ஒருமுறை கூட சந்திக்கவில்லை.

அவர் இப்போது டைரக்டாகவும் ஆகி விட்டார். அடர் முதன்முறையாக டைரக்ட் செய்த சிம்கா படப்பிடிப்பு தளத்துக்கு ஒருமுறை கூட அவரது அப்பா விஜய் நேரில் வந்து பார்க்கவில்லை. இந்த படத்தின் துவக்கவிழா பூஜையிலும் விஜய் ஒருமுறை பங்கேற்கவில்லை. தனது அப்பா விஜய்க்கு கடல் போல நீலாங்கரையில் பங்களா வீடு இருந்தும், ஜேசன் சஞ்சய் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் அறை எடுத்து தங்கியிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அரசல் புரசலாக இருந்த விஷயம் இப்போது பூகம்பமாக வெடித்துள்ளது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என் கணவர் விஜயுடன் எனக்கு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றும் சங்கீதா கூறியதாகவும் தெரிகிறது.

செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவாகரத்து கோரிய அந்த மனுவில் முக்கிய பகுதி இதுதான். ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டு இருந்தார் விஜய். இது எனக்கு 2021ம் ஆண்டு ஏப்ரலில் தெரிய வந்தது. நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை அவர் தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன் என்று விஜயின் மனைவி சங்கீதா அதில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்ற மனோகரா பட வசனத்தை போல இதுவரை தனது கணவர் விஜய் விஷயத்தில் அமைதி காத்து வந்த அவரது மனைவி சங்கீதா இப்போது பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி விட்டார். 27 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் நடிகர் விஜய் தனக்கு தந்த ஏமாற்றத்தையும் செய்த துரோகத்தையும் அவரால் ஏற்பட்ட மன வலிகளையும் பொதுவெளிக்கு கொண்டு வந்துவிட்டார் சங்கீதா.

ஆனால் இந்த தகவல் அனைத்துமே 100 சதவீதம் உண்மைதான் என்பதை அவரது மனைவி சங்கீதா இன்று வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டார். சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ள அவர் விஜய் தனக்கு செய்த துரோகத்தையும் அதற்கு காரணமாக ஒரு நடிகை இருந்தார் என்பதையும் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு திருமண வாழ்வில் ஏற்பட்ட இந்த கசப்பான மற்றும் மோசமான ஒரு திடீர் திருப்பம், அவரது ரசிகர்களுக்கும் தவெக கட்சியினருக்கும் மிகப்பெரிய பலத்த அதிர்ச்சியை தந்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிற ஒரு பரபரப்பான சூழலில் இப்படி ஒரு அதிர்ச்சியான முடிவை சங்கீதா எடுத்திருப்பதும் விஜயின் அரசியல் ஆட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது.

குடும்பத்திற்கே உண்மையாக இல்லாத விஜய் தான், இவருடை கட்சி தொண்டர்களுக்கும், வாக்களிக்க போகும் மக்களுக்கும் உண்மையாக இருக்க போகிறாரா என்கிற கேள்வி தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.