திருமாறன் ஜிக்கு தொகுதியை உறுதி செய்த பாஜக… 7 அதிமுக – 3 பாஜக… வெளியான மதுரை பத்து தொகுதிக்கான பங்கீடு…

0
Follow on Google News

மார்ச் முதல் இரண்டாம் வாரம் அல்லது மார்ச் மூன்றாவது வாரத்திற்குள் தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கும் என எதிர்பார்க்க பட்டுள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும், தங்களுடைய கூட்டணி காட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அந்த வகையில் எந்தந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியை தமிழகத்தில் தலைமை தாங்கியுள்ள அதிமுக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணியில் இருந்த அமமுக , திருமாறன் ஜியின் தென் இந்திய பார்வேர்ட் பிளாக், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன் போன்ற கட்சிகளுக்கு சேர்த்து பாஜக கைவசம் தொகுதிகளை ஒப்படைத்து விட்டு, அதில் இருந்து கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு பாஜக தொகுதிகளை பிரித்து கொடுக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தான் சமீபத்தில் டி டி வி தினகரன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை பாஜக உடன் பேசி வருகிறோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், அதிமுக 7 தொகுதிகளும், மீதம் பாஜக கைவசம் மூன்று தொகுதிகளை ஒப்படைத்து, அதில் இருந்து பாஜக மற்றும் இதர கூட்டணி கட்சிகளுக்கு பாஜகவே பங்கீடு செய்ய இருப்பதாக முடிவு செய்யப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் மதுரையில் உள்ள 10 தொகுதியில் 1 தொகுதியில் நேரடியாக போட்டியிடும் பாஜக, தோழமை கட்சியான திருமாறன் ஜியின் தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதியும், அமமுக வுக்கு 1 தொகுதியும் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இடையில் அதிமுகவிடம் இருந்து மதுரையில் கூடுதலாக ஒரு தொகுதியை பெற்று 4 தொகுதியில் பாஜக இரண்டு தொகுதியிலும், கூட்டணி கட்சியான திருமாறன் ஜிக்கு 1 தொகுதி, அமமுக வுக்கு 1 தொகுதியில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தையில் பாஜக மேல்மட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் அதன் கூட்டணி கட்சியான திருமாறன் ஜி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தாமாகவே முன் வந்து மதுரை பாராளுமன்ற தொகுதியை திருமாறன் ஜி விட்டு கொடுத்தது மட்டுமின்றி, மதுரை பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் இரண்டாம் இடம் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் திருமாறன் ஜி.

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு சுமார் 2 வருடத்திற்கு முன்பிருந்தே தீவிரமாக மதுரை பாராளுமன்ற தேர்தல் பணியை திருமாறன் ஜி செய்து தேர்தல் களத்தை தயாராக வைத்து இருந்ததில் விளைவு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இரண்டாம் இடம் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தது. அந்த வகையில் பாஜக மேல்மட்ட தலைவர்கள் மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்று இருக்கும் திருமாறன் ஜிக்கு 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுரையில் உள்ள 1 தொகுதியை பாஜக டிக் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில் தற்பொழுது மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் அதிமுக 7 தொகுதியிலும் கூட்டணி கட்சிகள் 3 தொகுதியிலும் போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் எந்தந்த தொகுதி என்பது இறுதி செய்யபடும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.