தாம்பத்திய உறவை தவிர்த்த விஜய்…அந்த நடிகை தான் காரணம்… கண் கலங்கிய சங்கீதா…

0
Follow on Google News

விஜயின் மனைவி சங்கீதா அவருடைய கணவர் விஜயை விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார், என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிடுவது எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் அவமானத்தை தருகிறது. தேவைப்பட்டால் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் அந்த நடிகையை வழக்கின் 2வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன் என மனுவில் சங்கீதா குறிப்பிட்டுள்ளார்,

இதைவிட முக்கியமான விஷயம் விஜய் என்னை நடத்திய விதம்தான். விஜய் என்னை கடுமையாக நடத்தினார். சண்டைக்கான காரணம் குறித்து பேசியபோது, அதைப்பற்றி பேசுவதை தவிர்த்தார். ஒரு கட்டத்தில் வீட்டின் ஒரு பகுதியிலேயே தன்னை தனிமைப்படுத்தி வாழ வைத்தார்.

எனவே எனக்கு விவாகரத்து வேண்டும். மட்டுமல்லாது விஜய்யின் வருமானம் மற்றும் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு கவுரவமான மற்றும் நியாயமான ஜீவனாம்ச தொகையை தனக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். மிக முக்கியமாக, தாம்பத்திய உறவு குறித்தும் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது விஜய் தன்னுடனான தாம்பத்திய உறவை தவிர்த்துவிட்டார் என்று கூறியிருக்கிறார். விஜய் உணர்வுப்பூர்வமாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தன்னை புறக்கணித்துவிட்டார். அவரது சமூக மற்றும் தொழில்முறை வாழ்க்கையிலிருந்து என்னை புறக்கணித்துவிட்டார் என்றும் கூறியிருக்கிறார். இது விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்றும் சங்கீதா கூறியிருக்கிறார்.

மேலும் எனக்கு எனது கணவர் விஜய் தரப்பில் இருந்து நெருக்கடி அழுத்தம் ஏற்பட்டால் அந்த நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை கோர்ட்டில் வழங்குவேன் என்றும் விஜயின் மனைவி சங்கீதா மனுவில் எச்சரிக்கையாக கூறியிருக்கிறார். அவர் குறிப்பிடும் அந்த நடிகை யார் என்பது ரசிகர்களில் பலருக்கும் தெரிந்த உண்மை தான். அந்த நடிகையும் இன்னும் 40 வயதுகளை கடந்தும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார்.

கோவாவில் கடந்த ஆண்டு நடந்த கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில் திருமணத்துக்கு கூட நடிகர் விஜய் அந்த நடிகையுடன் தனி விமானத்தில் சென்று வந்தது பெரிய அளவில் இணையத்தில் வைரலானது. மேலும் அந்த நடிகை வீட்டில் ஒருமுறை இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்த போது 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நெக்லஸ் சோதனையில் பிடிபட்டது. அப்போது அந்த நடிகை நடிகர் விஜய்தான் இந்த நெக்லஸை எனக்கு பரிசளித்தார் என்று கூறிய தகவலும் வெளியானது.

மேலும் சமீபத்தில் கூட பிரபல அரசியல்வாதி அந்த நடிகையுடன் நடிகர் விஜயை சம்பந்தப்படுத்தி பேசியிருந்தார். அதனால் சங்கீதா இதுவரை அந்த நடிகையின் பெயரை வெளிப்படையாக கூறாத நிலையில் அவசியம் ஏற்பட்டால் விஜய் தரப்பில் இருந்து நெருக்கடி வந்தால் அந்த நடிகையை வழக்கில் 2வது எதிர் மனுதாரராக சேர்ப்பேன் என்றும் இந்த மனுவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மொத்ததில் தூய சக்தி தவெக தலைவர் விஜய் இப்போது நடிகை ஒருவரின் சகவாசத்தால் அவரது குடும்பத்துக்கே தீய சக்தியாக மாறியிருக்கிறார். தோளுக்கு மேல் வளர்ந்த மகனும் மகளும் உள்ள சூழலில் தனது குடும்பத்தை பிரிந்து அரசியல் கட்சி துவங்கிய விஜயின் தனி மனித ஒழுக்கமும் கட்டுப்பாடும் இப்போது கேள்விக்குறியாகி விட்டது. இந்த விவகாரத்தை சந்தி சிரிக்க வைக்க இனி விஜயின் அரசியல் எதிரி திமுகவும் கொள்கை எதிரி பாஜகவும் தெரு தெருவாய் மேடை போட்டு பேசுவார்கள். அதெல்லாம் தவெக கட்சி ஓட்டுகளுக்கு வேட்டு வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here