திமுகவுக்கு சாதகமாக இல்லை… உளவு துறை கொடுத்த ரிப்போர்ட்… ஷாக் ஆன முக ஸ்டாலின்…

0
Follow on Google News

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி கொண்டிருக்கையில் ஒவ்வொன்றாக வெளிவரும் சர்வ ரிப்போர்ட்டுகள் திமுக தலைமையை ஆட்டம் காண வைத்திருக்கிறது. குறிப்பாக திமுக கைவசம் தேர்தல் நிலவரம் குறித்து சர்வே ரிப்போர்ட் எடுப்பதற்காகவே சுமார் 4 கம்பெனிகள் வேலை செய்கிறது. அது மட்டுமில்லாமல் திமுக கைவசமே உளவுத்துறையும் இருக்கிறது.

இப்படி ஒரு சூழலில் சமீபத்தில் தேர்தல் கள நிலவரம் குறித்த முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சென்ற சர்வே ரிப்போர்ட் மிகப்பெரிய அளவில் மு க ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சென்னை மற்றும் டெல்டா போன்ற பகுதிகளில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது, கொங்கு மண்டலம் வட மாவட்டங்களில் அதிமுக பெரும் வெற்றியை பெற்றது.

அந்த வகையில் கடந்த முறை தென் மாவட்டத்தில் திமுக பெற்ற வெற்றி தான் தேர்தல் முடிவுகளை இறுதி செய்து திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தியது. இந்நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அந்த வகையில் தென் மாவட்டமே திமுகவிற்கு கை கொடுத்திருந்தது.

இதற்கு முக்கிய காரணம் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் டிடிவி தினகரன் தனித்து போட்டியிட்டு அதிமுக வாக்குகள் பெருமளவு அவர் தென் மாவட்டங்களில் பிரித்தார். மேலும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வன்னியர்களுக்கு 10 .5 சதவீதம் இட ஒதுக்கீடை வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தது தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பலத்த அடியை கடந்த சட்டசபை தேர்தலில் கொடுத்தது.

இந்த நிலையில் தற்போது டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைந்துள்ளது, மேலும் பாஜக மாநில தலைவராக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சார்ந்த நைனா நரேந்திரன் நியமிக்கப்பட்டது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாறன்ஜியின் தென்னிந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சி தென் மாவட்டத்தில் வலிமையாக இருப்பது. இதெல்லாம் திமுகவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம் சமீபத்தில் முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சென்ற சர்வே ரிப்போர்ட்டில் சென்னை மற்றும் டெல்டாவில் வழக்கம்போல் திமுக மிகப் பெரிய அளவில் கணிசமான வெற்றியை பெற்று விடும், அதேபோன்று கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்று விடும், தென் மாவட்டத்தில் அதிமுக வலுவான வெற்றியை பெற்று விட்டால் திமுக ஆட்சியை இழந்து விடும் என்கின்ற எச்சரிக்கை விடும் விதமாக முதல்வரின் கவனத்திற்கு ரிப்போர்ட் சென்று இருக்கிறது.

இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வத்தை திமுக பக்கம் இழுத்து இருக்கிறார், முதல்வர் மு க ஸ்டாலின் என்கிற என்கிறது அரசியல் வட்டாரங்கள். மேலும் காங்கிரஸ் – திமுக பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் நீடித்து வரும் நிலையில், ஆட்சியில் பங்கு பிறகு பார்த்து கொள்ளலாம், தொகுதியை குறைக்க முடியாது என 45 தொகுதிகளை காங்கிரஸ் திமுகவிடம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கடுமையான சிக்கலில் இருக்கும் திமுக, யார் வந்தாலும் கூட்டணியில் சேர்த்து கொள்ளுவோம் என் வருகின்ற அணைத்து கட்சிகளையும் ஒரு பக்கம் கூட்டணியில் திமுக சேர்ந்து கொண்டிருக்க மறுபக்கம் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுக்க முடியாமல் தவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here