ரவுண்டு கட்டி செமத்தியா வாங்கிய வெற்றிமாறன்… உச்சகட்ட அவமானத்தில் வெற்றிமாறன் என்ன செய்தார் தெரியுமா.?

0
Follow on Google News

சமுதாயத்தை சீரழிக்கும் வகையில், தமிழக இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்தும் விதத்தில், திரைப்படம் எடுத்து வருகின்றவர் இயக்குனர் வெற்றிமாறன், இவருடைய இயக்கத்தில் வெளியான படங்களில், போலீசாரை படத்தின் கதாநாயகன் தாக்குவது போன்ற காட்சிகளை அமைப்பது, போலீசார் மிக கொடூரமானவர்கள் போன்று சித்தரித்து படம் எடுப்பது போன்ற காட்சிகளை அமைத்து தமிழக இளைஞர்கள் மனதில் போலீசார் என்பவர்கள் கொடூரமானவர்கள் என்கிற நச்சு விதைகளை விதைக்கும் வகையில் படம் எடுக்க கூடியவர் வெற்றிமாறன்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தில் நடந்த பல்வேறு போராட்டங்கள் கலவரங்களாக வெடித்ததில் முக்கிய காரணமாக இருந்தது, போராட்டக்காரர்கள் தமிழக போலீசார் மீது தாக்குதலை தொடங்கியபின்பு தான், இது போன்ற ஒரு சூழல் உருவதற்க்கு காரணமாக வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் அவர்களின் திரைப்படங்களில் போலீசாரை மிக கொடூரமாக காண்பித்து இளைஞர்களை தவறாக வழிநடத்துவது தான் என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் திரைப்படங்களை எடுத்துவிட்டு, ஹாலிவூட் தரத்திற்கு படம் எடுத்தது போன்று பில்டப் கொடுக்கின்றவர் வெற்றிமாறன். இந்நிலையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தையும், சோழ மன்னர்களையும் தமிழர்கள் கொண்டாடி வரும் நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சர்ச்சைக்குரிய வகையில் வெற்றிமாறன் பேசினார்.

அதில், நம்முடைய அடையாளங்களை தொடர்ந்து பறித்து கொண்டு வருகிறார்கள், வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும், ராஜராஜ சோழன் இந்துக்களின் அரசன் என்பதாக இருக்கட்டும், இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுப்பது சினிமாவில் நடந்து வருவதாக, தான் ஒரு வரலாற்று அறிஞர் என்பது போன்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் வெற்றிமாறன்.

பொதுவாக இதற்கு முன்பு சினிமா துறையை சேர்ந்தவர்கள், மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினால், சம்பந்தப்பட்ட அந்த துறையை சேர்ந்தவர்கள் யாரும் பெருமைப்பாலும் எதிர்ப்பு தெரிவிப்பது கிடையாது, ஆனால் வெற்றிமாறன் விவகாரத்தில் சினிமா துறையை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் வெற்றிமாறனை ரவுண்டு கட்டி வெளுக்க தொடங்கியுள்ளார்கள்.

சினிமாவில் புதிய இயக்குனர்கள் வந்தோமா, படத்தை எடுத்தோமா, சம்பாரிச்சமா, ரெண்டு வீடு வாங்கினோமா, போனோமான்னு இருக்கணும். தேவையில்லாம ராஜராஜ சோழன் இந்து என்றெல்லாம் பேசுறாங்க என்று வெற்றிமாறனுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் கஞ்சா கருப்பு, அவரை தொடர்ந்து நடிகை குஷ்பு இது குறித்து கூறுகையில்,

வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும் தான் பார்ப்பேன் என அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், ‘வரலாறு தெரியாமல் மணிரத்தினம் படம் எடுத்திருக்க மாட்டார் என குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார், அதே போன்று நடிகர் சரத்குமார் மிக கட்டமாக வெற்றிமாறனுக்கு எதிராக கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த சர்ச்சைகள் எல்லாம் நாட்டிற்கு தேவையான ஒன்று தானா? கிறிஸ்தவம் எப்போது உருவானது? கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? இஸ்லாம் எப்போது உருவானது? இஸ்லாமியர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? சைவ சமயம் இருந்தது உண்மை, வைணவ சமயம் இருந்தது உண்மை. அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை எனும் போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?

நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும் போது, செவ்வாய் கோள்களில் குடியேற சிந்திக்கும் போது, ராஜ ராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று விவாதிக்காமல், உலக அதிசயங்களுள் ஒன்றாக வைத்து போற்றக்கூடிய மாபெரும் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன், வீரத் தமிழன் ராஜ ராஜ சோழனின் புகழை உலகின் எட்டுத்திக்கும் எடுத்துச் செல்வதில் இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும்” என வெற்றிமாறன் புத்தியில் உறைக்கும்படி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு முன்பு இந்து மதம் குறித்து சினிமா துறையை சேர்ந்த சிலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய போது அமைதியாக இருந்த சம்பந்தப்பட்ட சினிமா துறையினர், வெற்றிமாறன் விவகாரத்தில் ரவுண்டு கட்டி வெளுத்து வருவதால், இனி வரும் காலங்களில் சர்சைக்குரிய வகையில் மதம் சார்ந்து கருத்து சொல்வதற்கு சினிமா துறையினர் யாரும் முன் வரமாட்டார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.