கங்குவா படு கேவலமான வசூல்… வெளியே சொன்னா வெட்க கேடு… கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன்…

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான கங்குவா படம் படு தோல்வியை தழுவி மண்ணை கவ்வியுள்ளது. இந்த படம் 2000 கோடி வசூல் செய்யும், இந்தியாவே வாயை பிளந்து கொண்டு பார்க்கும் என்று சூர்யாவும் ஞானவேல் ராஜாவும் கொடுத்த பில்டப்புக்கு எதிர்மாறாக, படம் வெளியான முதல் நாளே பால் ஊத்தி கங்குவா படத்தை அடக்கம் செய்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

முதல் நாளே வசூலில் பலத்த அடி வாங்கிய கங்குவா அடுத்த நாள் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாமல், கங்குவா படம் வெளியான அடுத்த இரண்டு நாளில், கங்குவா திரையிடப்பட்ட திரையில், கங்குவா வெளியாவதற்கு 2 வாரம் முன்பு வெளியான அமரன் படத்தை திரையிட்டனர் திரையரங்கு உரிமையாளர்கள், அந்த அளவுக்கு சிவகார்த்திகேயனிடம் படுதோல்வி அடைந்து மண்ணை கவ்வினார் சூர்யா.

இந்நிலையில் கங்குவா படத்தை எப்படியாவது ஓட்டி போட்ட காசையாவது எடுத்து விட வேண்டும் என, சில சினிமா துறையை சேர்ந்தவர்களை வைத்து கங்குவா ஆகா ஓஹோ என்று புகழ வைத்தும் மக்கள் கங்குவா, நீ துக்கு போட்டு தூக்குவா என்று கடந்து விட்டர்கள், சத்தம் அதிகமாக இருக்கிறதா சவுண்ட் 2 புள்ளி குறைக்குறோம், முதல் 30 நிமிடம் மொக்கையா இருக்கா, அதை எடிட் செய்கிறோம், வாங்க வந்து படத்தை பாருங்க என் கங்குவா பட குழு கூவினாலும் மக்கள் மத்தியில் கங்குவா படத்தை பார்க்க ஆர்வம் வரவில்லை.

இதனை தொடர்ந்து கங்குவா இத்தனை கோடி வசூல், அத்தனை கோடி வசூல் என தயாரிப்பு நிறுவனம் அள்ளி விட்டாலும், யார் காதில் பூ சுத்துற கிளம்பு கிளம்பு மக்கள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் அமரன் முதல் நாளே ரூபாய் 42.3 கோடிகளை அள்ளியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படம் என்றால் அது அமரன் மட்டும்தான்.

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இருந்ததால் முதல் மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயன் படங்களிலேயே மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்த படமாக அமரன் மாறியது. சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக அமரன் படம் மாற்றிவிட்டது. படம் வெளியாகி நேற்றுடன் அதாவது நவம்பர் 24ஆம் தேதியுடன் 25 நாட்கள் ஆகின்றது.

இந்நிலையில் அமரன் படம் இந்த 25 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் ரூபாய் 315 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இதுமட்டும் இல்லாமல் படம் வார நாட்களில் தியேட்டர் ஓனர்களுக்கு நஷ்டத்தினைக் கொடுக்கவில்லை என்றாலும் வார இறுதியில் சக்கை லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் அளவிற்கு வசூலைக் குவிக்கின்றது.

இப்படியான நிலையில் படம் தொடர்ந்து அமரன் நல்ல வசூலைக் குவித்து வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது சூழல் இப்படி இருக்க கங்குவா திரைப்படம் வெளியாகி 11 நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நேற்று மட்டும் அந்தப் படம் தமிழ்நாட்டில் 90 லட்சம் ரூபாயும், இந்திய அளவில் 78 கோடி ரூபாயும் வசூலித்திருப்பதகாவும்; உலகளவில் 101 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருப்பதாக Sacnilk வலைதளம் கூறியிருக்கிறது. இதனால் இந்தப் படம் 150 கோடி ரூபாயை தொடுவதே பெரும் பாடாக இருக்கும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.