இனிமேல் பயில்வான் வாயே திறக்க முடியாது… சரியான பதிலடி கொடுத்த ஏ ஆர் ரகுமான் மனைவி சாய்ரா பானு…

0
Follow on Google News

ஏ ஆர் ரகுமானை விட்டு விலகுவதாக அவரது மனைவி அறிவித்த சில மணி நேரங்களில், அடுத்து ஏ ஆர் ரகுமான் ஒரு அறிக்கை வெளியிட்டு தன்னுடைய பிரிவை உறுதி செய்தார், இதனை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்த அடுத்த நாள் ஏ ஆர் ரகுமான் இசை குழுவில் இடம்பெற்றுள்ள கித்தார் கலைஞர் மோகினி டே அவருடைய கணவரை விட்டு பிரிவதாக அறிவித்ததை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் விவகாரம் பற்றி எரிய தொடங்கியது.

இந்நிலையில் சும்மாவே கண்ணும் காதும் வைத்து, என்னமோ இவர் பக்கத்தில் இருந்து பேசுவது போன்று பேசி வரும் சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதனுக்கு இந்த விவகாரம், சும்மா இருந்த வாயிக்கு அவுல் கிடைத்தது போன்று அமைந்து விட்டது. அவர் இஷ்டத்துக்கு வாயிக்கு வந்ததை அடித்து விட தொடங்கிய பயில்வான் ரங்கநாதன், ஏ ஆர் ரகுமான் மற்றும் கித்தார் கலைஞர் மோகினி டே இருவரையும் இணைந்து கண்டா படி பேச தொடங்கினார்.

அதாவது ஏ ஆர் ரகுமான் சென்னைக்கே வருவது இல்லை, மும்பை துபாய் என பறந்து கொண்டு இருக்கிறார், அவருடன் அவர் இசை குழுவில் இடம் பெற்றுள்ள மோகினி டே மிக நெருக்கமாக உள்ளார், குறிப்பாக மோகினி டே – ஏ ஆர் ரகுமான் இருவரும் வெளிநாடு கலை நிகழ்ச்சி சென்றால், இருவரும் ஒரு ஹோட்டலில் தங்குகிறார்கள், அதனால் தான் ஏ ஆர் ரகுமான் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது என பேசிய பயில்வான் ரங்கநாதன்.

குறிப்பாக இவர் பக்கத்தில் இருந்து விளக்கு பிடித்தது போன்று வாய்க்கு வந்தது, ஒரு நல்ல மனிதர், இதுவரை தமிழ் இந்த ஒரு பெண்ணுடன் கிசு கிசுவில் சிக்காத ஏ ஆர் ரகுமான் பற்றி பயில்வான் பேசிய பேச்சு யாராலும் ஏற்று கொள்ள முடியவில்லை என்றாலும் கூட இதில் சம்பந்த பட்ட ஏ ஆர் ரகுமான் இது குறித்து விளக்கம் கொடுக்காமல் அமைதியாக இருந்து வந்தார். இது மக்களுக்கு மிக பெரிய அளவில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுக்கு மேல் அமைதியாக இருக்க கூடாது என முடிவு செய்த ஏ ஆர் ரகுமான். மனைவியுடனான விவாகரத்து குறித்து தன் மீது அவதூறு பரப்புவதாகவும் சில யூடியூப் சேனல்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாகவும், சிலர் கற்பனையில் பேட்டி அளித்துள்ளதாகவும் தெரிவித்த ஏ.ஆர். ரகுமான், அந்த வீடியோக்கள், கட்டுரைகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதன் பின்பு தான் ஹைலைட் என்னுடைய கணவர் பற்றி உனக்கு என்ன தெரியும் என பயில்வான் போன்ற மூன்றாம் தர நபர்கள் நாக்கை பிடுங்குவது போன்று கேட்டு விட்டார் ரகுமான் மனைவி சாய்ரா பானு. விவாகரத்து முடிவு குறித்து ஆடியோ மூலம் விளக்கம் அளித்த சாய்ரா பானு, நான் தற்போது மும்பையில் இருக்கிறேன். எனக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. இதனால்தான் நான் ஏ.ஆர்.ரகுமானை பிரிய முடிவு செய்தேன்.

அவர் மீது அவதூறு பரப்ப வேண்டாம் என அனைத்து யூடியூப் சேனல்களையும் தமிழ் மீடியாக்களையும் கேட்டுக் கொள்கிறேன். அவர் அற்புதமான மனிதர். உலகிலேயே சிறந்த மனிதர். அவரை போல் ஒருவரை யாரும் பார்க்க முடியாது. எனது உடல்நல பிரச்சினைகளுக்காக நான் சென்னையை விட்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனக்கு நன்றாக தெரியும், நான் சென்னையில் இல்லாவிட்டால் எல்லாரும் சாயிரா எங்கே என கேட்பார்கள்.

இதனால் தேவையில்லாத அனுமானங்கள் எழும். பிசியாக இருக்கும் அவரையும் என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அதனால்தான் இந்த பிரிவு! அவர் மீது நான் வைத்துள்ள நம்பிக்கை என் வாழ்வைவிட பெரியது. அந்தளவுக்கு நான் அவரை நேசிக்கிறேன். அவரது பெயருக்கு தயவு செய்து யாரும் களங்கம் ஏற்படுத்தாதீர்கள். அவர் சிறந்த மனிதர். நன்றி என தொடர்ந்து ஏ ரகுமான் குறித்து அவதூறு பரப்பி வந்த பயில்வான் நாக்கை பிடிக்குவது போன்று அமைத்துள்ளது ரகுமான் மனைவி சாய்ரா அளித்துள்ள இந்த விளக்கம். இது குறித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.