மக்களே உங்க வீட்டு பிள்ளையா நினச்சு மன்னிச்சுடுங்க… படுத்தே விட்ட சூர்யா..

0
Follow on Google News

மக்கள் கொடுத்து பலத்த அடி, ஐயோ.. தெரியமா செஞ்சுட்டோம்.. எங்களை மன்னித்து விடுங்க, என 23 ம் புலிகேசி படத்தில் வடிவேலு நகைச்சுவை காட்சியில் வருவது போன்று அட ச்சீ படுத்தே விட்டான்யா என்று சொல்லும் வகையில் மிக பரிதாபமாக அமைந்துவிட்டது சூர்யா ஜோதிகாவின் நிலைமை. சூர்யா – ஜோதிகா இருவருமே சினிமாவில் டாப் நடிகராக அவர்கள் நடித்த படங்களை ஒரு காலத்தில் கொண்டாடி வந்தவர்கள் தமிழக மக்கள்.

ஆனால் தேவையின்றி அடுத்தடுத்து சூர்யா – ஜோதிகா – சிவகுமார் என அடுத்தடுத்து சர்ச்சை கூறிய வகையில் பேசி மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி சினிமாவில் அழிவை நோக்கி செல்ல தொடங்கினார்கள், அந்த வகையில் தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சை கூறிய வகையில் மேடை ஒன்றில் ஜோதிகா பேசிய அந்த பேச்சில் தொடங்கியது, சூர்யா குடும்பத்திற்கான கெட்ட நேரம் என்றே சொல்ல வேண்டும்.

கோவிலுக்கு செலவு செய்யும் பணத்தில் மருத்துவமனைக்கு செலவு செய்யலாமே என்று ஜோதிகா பேசிய பேச்சு, நீங்கள் நடிக்கும் படத்தை பார்க்கும் பணத்தில் எதாவது ஏழை மாணவருக்கு பெஞ்சில் பேனா வாங்கி கொடுக்குறோம் என ஜோதிகா வின் சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சூர்யா – ஜோதிகா நடிக்கும் படத்தை குறிப்பிட்ட மக்கள் புறக்கணிக்க தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து அடுத்து ஜெய் பீம் சர்ச்சை.

ஜெய் பீம் படத்தில், வடமாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்க கூடிய ஒரு சமூகத்தை இழிவு படுத்தும் வகையில் திட்டமிட்டே சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்ட அந்த சமூகத்தினர் எதிர்ப்பை உதாசீன் படுத்தி, அவர்களிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கூட கேட்காமல் சூர்யா கடந்து சென்றது அந்த குறிப்பிட்ட சமூகத்தின் கோபத்துக்கு உள்ளானார் சூர்யா. இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கி நாளுக்கு சூர்யா மற்றும் அவரது குடுமப்த்தினருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்தே சென்றது.

இதனை தொடர்ந்து கங்குவா படத்திற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தை சூர்யா – ஜோதிகா மீது உள்ள கோபத்தின் காரணமாக மக்கள் அந்த படத்தை புறக்கணித்து தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர், குறிப்பாக வடமாவட்டக்களில் எதற்கும் துணிந்தவன் வெளியான திரையரங்குகள் கற்று வாங்கியது. இப்படி எதற்கும் துணிந்தவன் படத்தில் பலத்த அடி வாங்கிய சூர்யா நடிப்பில் அடுத்த வெளியான படம் தான் கங்குவா.

இந்த படம் வெளியாவதற்கு முன்பே ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசிய சர்ச்சை பேச்சு, சூர்யா ஜெய் பீம் படத்தின் போது நடந்துகொண்டது, இப்படி ஒவ்வொன்றையும் மக்களுக்கு நினைவு படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு செய்து, சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் கங்குவா படத்தை புறக்கணிப்போம் என பிரச்சாரம் மக்கள் மத்தியில் மிக பெரிய ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.

சூர்யா – ஜோதிகாவுக்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்பு அலை இருந்தாலும் கங்குவா படம் ஓரளவு நன்றாக இருந்து இருந்தால் தப்பித்து இருக்கும், ஆனால் படம் படு மொக்கையாக இருக்க, ஏற்கனவே சூர்யா – ஜோதிகா மீது செம்ம கோபத்தில் இருந்த் மக்கள் கங்குவாவை அடித்து துவைத்து துவம்சம் செய்ய முதல் நாளிலே பலத்த அடி வாங்கி மண்ணை கவ்வியது. இதனால் சூர்யா சினிமா கேரியரே முடிவுக்கு வரும் சூழலில் உளது.

இந்நிலையில் ஒன்றிணைந்து மக்கள் கங்குவா படத்திற்கு கொடுத்த பலத்த அடி ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசியதால் தான் என கூறப்படும் நிலையில், தற்பொழுது கோவில் கோவிலாக சூர்யா – ஜோதிகா இருவரும் சென்று அதை வீடியோ புகைப்படமாக வெளியிட்டு நாங்களும் ஆன்மீக வாதி தான் கடந்த காலத்தில் நடந்ததை மனதில் வைத்துக்கொள்ளாமல், உங்க வீட்டு பிள்ளையாக மன்னித்து எங்களுக்கு சினிமாவில் மறு வாழ்வு கொடுங்க என ஆன்மீகம் வேஷம் போட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களான சூர்யா – ஜோதிகா இருவரும் என சூர்யா – ஜோதிகா கோவில் கோவிலாக சென்று வருவது பற்றி எழுந்துள்ள விமர்சனம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.