சிவகார்திகேயன் படத்தில் ஜெயம் ரவி.. என்னடா இது ஜெயம் ரவிக்கு வந்த சோதனை…

0
Follow on Google News

நடிகர் சிவகார்த்திகேயன் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல், மிக குறுகிய காலத்தில், முன்னணி நடிகர்களுக்கு சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக சினிமாவை கட்டி ஆண்டு வரும் சினிமா குடும்பத்தில் இருந்து வந்த சூர்யா போன்ற நடிகர்களை அடித்து துவம்சம் செய்து விட்டு, ரஜினி விஜய் அஜித்துக்கு அடுத்த இடத்திற்கு வந்து விட்டார் என்பது அமரன் படம் வசூல் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இந்நிலையில் ஒரு நடிகர் உச்சத்தை அடைந்த பின்பு அந்த இடத்தை தக்க வைக்க கடுமையாக போராட வேண்டும், அந்த வகையில் அமரன் படம் மூலம் சிவகார்த்திகேயன் அடைந்த இடத்தை தக்க வைக்க அடுத்தடுத்து தன்னுடைய படத்தின் இயக்குனரையும் கதையை மட்டுமில்லை தன்னுடன் யார் நடிக்க வேண்டும், தனக்கு யார் வில்லனாக இருக்க வேண்டும் என மிக கவனமாக தேர்வு செய்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சுதா கொங்கார இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது பலருக்கும் எப்படி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க ஜெயம் ரவி ஒப்புக்கொண்டார் என்று ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதற்காக சிவகார்த்திகேயனுக்கு அதாவது ஒரு காலத்தில் ஜெயம் ரவியின் நடிகராக இருந்தபோது அவரை பேட்டி எடுத்த சிவகார்த்திகேயனுக்கு எப்படி வில்லனாக ஜெயம் ரவி ஒப்புக்கொண்டார் என்றால், இதற்கு முக்கிய காரணம் ஒரு ஹீரோ திடீரென்று வில்லனாக நடிக்கிறார் என்றால், அதற்கு பணம் முக்கிய காரணம் என்றாலும் கூட, ஜெயம் ரவி இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு முக்கிய காரணம் அவருக்கு 16 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிப்பதற்கே அவர் 15 கோடி தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது வில்லனாக நடிப்பதற்கு 16 கோடி அவருக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது, மேலும் அதிகபட்சம் ஜெயம் ரவி 25 நாள் கால் சீட் கொடுத்தால் இந்த படத்திற்கு போதும் என்று தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் ஒரு படத்தின் ஹீரோவாக கமிட்டானால் குறைந்தது 60 நாட்கள் ஆவது கால்ஷீட் கொடுக்க வேண்டும்.

அப்படி இருக்கும் பொழுது வில்லனாக வெறும் 25 நாட்கள் என்பதால் கம்மியான கால்ஷீட் அதிக சம்பளம் என்பது ஒரு காரணம், அதையும் தாண்டி புறநானூறு படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடித்தாலும் சிவகார்த்திகேயன் ஜெயம் ரவியை அடித்து தூம்சம் செய்வது போன்ற காட்சிகள் எல்லாம் கிடையாது. மேலும் குறிப்பாக ஜெயம் ரவியை ஒரு கொடூர வில்லனாக அசிங்கப்படுத்தி சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய அளவில் மாஸ் கொடுக்கும் வகையிலும் எந்த காட்சியும் இந்த படத்தில் இருக்காது.

அதாவது புறநானூறு படத்தில் ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்றும், குறிப்பாக தனி ஒருவன் படத்தில் எப்படி ஜெயம் ரவி கதாபாத்திரத்தை விட அரவிந்த்சாமி கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது அதேபோன்று புறநானூறு படத்தில் ஜெயம் ரவி கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் வகையில் இந்த கதை அமைந்துள்ளதால் தான் ஜெயம் ரவி இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுவது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.