மீண்டும் சுதா கொங்கராவை தேடி சென்ற சூர்யா… முகத்தில் அடித்தது போல் பேசி அனுப்பிய சுதா…

0
Follow on Google News

நடிகர் சூர்யா கங்குவா படத்தை நடித்து முடித்துவிட்டு அடுத்து இயக்குனர் சுதா கொங்கார இயக்கத்தில் புறநானூறு படத்தில் கமிட் ஆகி இருந்தார். அதே நேரத்தில் சுதா கொங்கார இயக்கத்தில் புறநானூறு படத்தை முடித்துவிட்டு ஹிந்தியில் கர்ணா என்கின்ற ஒரு பேன் இந்தியா படத்தில் கமிட்டாகி இருந்தார் நடிகர் சூர்யா. இந்த நிலையில் சூர்யா கங்குவா படத்தை முடித்து வந்தவுடன் அவரை வைத்து புறநானூறு படத்தை இயக்குவதற்கு அனைத்து கட்ட வேலைகளிலும் தயாராக வைத்திருந்தார் இயக்குனர் சுதா கொங்காரா.

ஆனால் சூர்யாவின் மனைவி ஜோதிகா அடுத்து சூர்யா சுதா கொங்காரா படத்தை முடித்துவிட்டு கர்ணா என்கின்ற ஒரு பேன் இந்தியா படத்தின் நடிக்க இருப்பதால் சுதா கொங்கார இயக்கும் புறநானூறு படத்தில் இந்தி எதிர்ப்பு போராட்ட போன்ற காட்சிகள் இடம் பெறுவதால், அது அடுத்து சூர்யா நடிக்க இருக்கும் கர்ணா படத்திற்கு இந்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்கும்.

ஆகையால் புறநானூறு படத்தில் அந்த ஹிந்தி எதிர்ப்பு காட்சிகளை நீக்க வேண்டும் என்று ஜோதியாக தன்னுடைய கணவர் சூர்யாவை வலியுறுத்தி இருக்கிறார். மனைவி சொல்லே மந்திரம் என்பது போல் சூர்யா இயக்குனர் சுதா கொங்காராவை சந்தித்து புறநானுறு படத்தின் கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், அதாவது இந்தி எதிர்ப்பு காட்சிகள் இல்லாதபடி கதையில் மாற்றம் செய்ய வலியுறுத்திருக்கிறார்.

ஆனால் படத்தின் மையக் கருவே அதுதான் மாற்ற முடியாது என்றதும் சுதா கொங்காராவுக்கும் சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சூர்யா அந்த படத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். சூர்யா சுதா பங்காரா படத்திலிருந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணம் நாம் தற்பொழுது கங்குவா என்கின்ற படத்தின் நடிக்கிறோம் இது மிகப் பெரிய அளவில் ஹிட்டாகி தான் ஒரு ஃபேன் இந்தியா ஸ்டார் ஆக உருவெடுத்து விடுவோம்.

அடுத்து கர்ணா என்கிற பேன் இந்தியா படம் கையில் உள்ளது, இப்படி இருக்கும் பொழுது சுதா கொங்கரா புறநானூறு படத்தை பொருட்படுத்தாமல் வெளியேறி விட்டார் சூர்யா. இதனை தொடர்ந்து சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயனை கமிட் செய்து அந்த படத்தின் அனைத்து வேலையும் தொடங்கி விட்டார் சுதா கொங்கோரா. இந்த நிலையில் தற்பொழுது கங்குவார் மிக பலத்த அடி வாங்கியது தொடர்ந்து மேலும் சூர்யா பேன் இந்தியா படமான கர்ணாவில் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சேதுபதி ஐபிஎஸ் படத்தில் செந்தில் கவுண்டமணி காமெடி காட்சிகளில் வருவது போன்று ஒரு பன்னி சொன்னதை நம்பி கப்பல்ல வேலை மாத 10 ஆயிரம் சம்பளம் என நம்பி இருந்த வேலையை விட்டு போயிட்டேன் நான் திரும்ப வரேன் அம்மா என்னை திரும்ப வேலைக்கு சேர்த்துக்கோங்க என்று கவுண்டமணி எம் என் நம்பியாரிடம் பேசுவது போன்று சூர்யா சுதா கொங்கரா வீட்டின் கதவை தட்டி இருக்கிறார்.

புறநானூறு படத்தில் நானே நடிக்கிறேன் சிவகார்த்திகேயனை தூக்கி விட்டு படத்தை நம்ம ஸ்டார்ட் பண்ணலாம் என்று கேட்டிருக்கிறார், ஆனால் அதற்கு சுதா கொங்கரா கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் என்று, ஏற்கனவே என்னை நீ அவமானப்படுத்திவிட்டு தான் இந்த படத்தில் இருந்து வெளியேறின நான் பட்டா அவமானத்தை மறக்க மாட்டேன் என்பதை மனதில் வைத்து ஒரே போடாக இந்த படத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை சிவகார்த்திகேயனை வைத்து படத்தை தொடங்கிவிட்டேன் என்று பதிலடி கொடுத்து சூர்யாவை அனுப்பி வைத்திருக்கிறார் சுதா கொங்கரா. இந்நிலையில் இருக்கிற விட்டு பறக்க ஆசை பட் கதையாக கருணாவை படத்தை நம்பி புறநானுறு படத்தில் இருந்து வெளியேறி இப்ப ரெண்டும் இல்லாம தவிக்கு சூர்யா இந்த நிலைமைக்கு யார் காரணம் என உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.