குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்கா கலந்துகொள்ளாவிட்டால்… சீறும் சீனா!

0

சீனாவில் நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்க அதிகாரிகள் கலந்துகொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.குளிர்கால ஒலிம்பிக் தொடர் அடுத்த ஆண்டு சீனாவில் நடக்க உள்ளது. இதில் உலக நாட்டு வீரர்கள் மற்றும் அந்தந்த நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தனர்.

இதற்குக் காரணமாக சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சீனா இதுகுறித்து தெரிவித்துள்ள பதிலில் ‘அமெரிக்கா தேவை இல்லாமல் விளையாட்டில் அரசியலைக் கலக்கிறது.

இது சீனாவை சிறுமைப்படுத்தும் செயலாக உள்ளது. அமெரிக்கா அதிகாரிகள் கலந்துகொள்ளா விட்டால் தகுந்த நடவடிக்கை எடுப்போம்’ எனக் கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியாக கருத்து வேற்றுமை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.