Home சினிமா சிவகார்த்திகேயனோடு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி திரைப்படம்!

சிவகார்த்திகேயனோடு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி திரைப்படம்!

0
சிவகார்த்திகேயனோடு மீண்டும் மோதும் விஜய் சேதுபதி திரைப்படம்!

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்ட நிலையில் இப்போது டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. முதலில் இந்த திரைப்படம் டிசம்பர் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது படத்தின் பணிகள் முடியாததால் ரிலீஸை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி தள்ளி வைத்துள்ளார்களாம். அதே நாளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!