பாஜகவிடம் இருந்து வந்த கடிதம்..! அவசர அவசரமாக சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கிய ஜீ தமிழ்.! கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா?

0
Follow on Google News

பிரதமர் மோடியை இழிவு செய்யும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஓன்று பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து பாஜக சார்பில் பெங்களூரில் உள்ள ஜீ தொலைக்காட்சி நிறுவன உயர் அதிகாரிக்கு கடிதம் ஓன்று அனுப்பப்பட்டது. அதில், ஜீ தமிழ் சேனலில் சமீபத்தில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் குறித்து உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஜனவரி 15, 2022 அன்று ஒளிபரப்பப்பட்டது.

அதில் பெரும்பாலும் 10 வயதுக்குட்பட்ட சிறு குழந்தைகள் போட்டியாளர்களாக பங்கு பெற்றனர். இந்த நிகழ்ச்சியின் நடுவராக பிரபல தமிழ் சினிமா நடிகை சினேகா, மிர்ச்சி செந்தில் ஆகியோர் நடுவராக பங்குபெற்றனர். மேலும் குழந்தைகளுக்கு வழிகாட்டியாக தொலைக்காட்சி நகைசுவை நடிகர் அமுதவாணன் இடம் பெற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியில் அ வேண்டுமென்றே பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இழிவு படுத்தும் வகையில் வசனங்கள் அந்த குழந்தைகள் வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

பணமதிப்பு நீக்கம், பல்வேறு நாடுகளுக்கு தூதரக பயணம், பிரதமரின் உடை மற்றும் முதலீட்டை திரும்பப் பெறுதல் குறித்த வசனம் அதில் இடப்பெற்றிருந்தது. 10 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தைகளுக்கு, இதில் உண்மையில் என்ன என்பதை புரிந்து புரிந்து கொள்ள முடியாது. ஆனால் நகைச்சுவை என்ற பெயரில் குழந்தைகளிடம் கட்டையப்படுத்த பட்டு இது போன்ற காட்சிகள் அரங்கேறியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள், அறிவிப்பாளர்கள் மற்றும் வழிகாட்டிகள் அனா அனைவரும் பிரதமர் குறித்த இந்த சர்ச்சைக்குரிய வசனத்துக்கு எந்தவிதமான தடையும் இல்லாமல் அதை ஊக்குவிப்பதைக் காண முடிந்தது.

சிறு குழந்தைகள் மூலம். தங்கள் சக பங்கேற்பாளர்களை விஞ்சும் முயற்சியில், இந்தக் குழந்தைகள் அவர்களுக்குச் சொல்லப்பட்டதைச் செய்கிறார்கள். இந்த செயலுக்காக தார்மீக ரீதியாகவும் இந்த சேனல் பொறுப்பேற்க வேண்டும், இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த தங்களை வலியுறுத்துகிறோம். பகிரங்க மன்னிப்பு கேட்க தயாரிப்பாளர், நிகழ்ச்சி நடுவர்கள் மற்றும் வழிகாட்டிகள் சேனல் நிர்வாகம் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். மேலும் இதற்கு காரணமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

யாரோ ஒருவரின் அரசியல் கொள்கையை முன்னிறுத்துவதற்கு இளம் குழந்தைகளைப் பயன்படுத்த முடியாது, இது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணமாக அமையும் என தமிழக பாஜக சார்பில் அதன் ஐடி விங் மாநில தலைவர் CTR நிர்மல் குமார் புகார் கடிதம் அனுப்பியிருந்த நிலையில் அவசர அவசரமாக ஜீ தமிழ் தொலைக்காட்சி தனது வலைப்பக்கத்தில் இருந்து அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை அவசர அவசரமாக நீக்கியுள்ளது குறிப்பிட தக்கது.

யோவ் பாரதிராஜா.. எதுக்குய்யா இந்த மானங்கெட்ட பொழப்பு.!உச்சக்கட்ட அவமானத்தில் பாரதிராஜா..!