காவல் நிலையத்தில் கதறிய ஜீ தமிழ் தலைமை ஊழியர்கள்.! தனி ஒருவனாக மண்டியிட வைத்த இஸ்லாமியர் யார் தெரியுமா.?

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பு செய்து பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது ஜீ தமிழ் நிர்வாகம். ஜீ தொலைக்காட்சியில் அப்படி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது யாருக்குமே தெரியாமல் இருந்து வந்த நிலையில். அந்த நிகழ்ச்சி தொடர்பான வீடியோவை திமுக எம்பி செந்தில்குமார், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்யை சிக்கலில் மாட்டிவிட்டத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார்கள்.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் மத்திய அமைச்சரவை வரை சென்ற நிலையில் ஜீ குழுமம் தலைவர் ஜி தமிழ் நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதனால் ஜி தமிழ் நிர்வாகத்தில் பணிபுரியும் சில ஊழியர்கள் வேலை பறிபோக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் தீவிர ஆதரவாளரான முகமது அதுல்லா என்கிற தேசியவாதி போராட்டத்தில் குதித்தார்.

பிரதமர் மோடியை இழிவு படுத்திய ஜீ தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பதாகைகளுடன் கிண்டியில் உள்ள ஜீ தமிழ் அலுவலகம் முன்பு இன்று தனி ஒருவனாக போராட்டத்தில் ஈடுபட்டார் முகமது அதுல்லா. இதனை தொடர்ந்து ஜீ தமிழ் நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அங்கே வந்த போலீசார் முகமது அதுல்லாவை கிண்டியில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த தகவல் அறிந்து இந்து மக்கள் கட்சி மற்றும் பாஜகவினர் கிண்டி காவல்நிலையம் முன்பு குவிந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் நேரடியாக தலையிட்டு அந்த மாவட்ட பாஜக முக்கிய தலைவர்களை கிண்டி காவல் நிலையத்துக்கு செல்ல வலியுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து அங்கே வந்தவர்கள் எதற்காக முகமது அதுல்லாவை கைது செய்துள்ளீர்கள் என கேட்க. அதற்கு கைது செய்யவில்லை என்ன பிரச்சனை என கேட்க அழைத்து வந்தோம் என காவல் துறை தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கே வந்திருந்தவர்கள் மற்றும் முகமது அதுல்லா ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிர்வாக தலைமை ஊழியர்கள் கிண்டி காவல் நிலையத்தில் ஆஜரானார்கள். அப்போது காவல்துறை விசாரணையில் இது போன்ற தவறு இனிமேல் நடக்காது என்று அங்கே கதற ஆரம்பித்துள்ளார்கள் ஜீ தமிழ் ஊழியர்கள்.மேலும் இனிவரும் காலங்களில் இது போன்று நடக்காது என ஜீ தமிழ் நிர்வாகம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என காவல் துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரதமர் குறித்து இழிவு படுத்தியது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் இருந்து உறுதியளிக்கப்பட்டது.

இதன் பின்பு காவல் நிலையத்தில் குவிந்த இந்துமக்கள் கட்சியினர் மற்றும் பாஜகவினர் ஆகியோர் கலைந்து சென்றனர். இந்நிலையில் தனி ஒருவனாக போராட்டத்தை முன்னிறுத்தி ஜீ தமிழ் நிர்வாக தலைமை ஊழியர்களை மண்டியிட வைத்த தேசியவாதி முகமது அதுல்லாவை பலர் பாராட்டி வருகையில். இது குறித்து அவரை தொடர்பு கொண்டு நாம் பேசிய போது, இந்த விவகாரத்தில் தனக்கு பெரும் உதவி செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.

யோவ் பாரதிராஜா.. எதுக்குய்யா இந்த மானங்கெட்ட பொழப்பு.!உச்சக்கட்ட அவமானத்தில் பாரதிராஜா..!