வேறு ஒரு பெயரில் மீண்டும் உருவெடுக்கும் கறுப்பர் கூட்டம்… ஆபாசம் “ஆபாசம் அவ்வளவு ஆபாசம்..! களத்தில் இறங்கிய இந்து அமைப்புகள்..

0

இந்துக்கள் மனம் புண்படும்படி இந்து கடவுள்கள் மற்றும் இந்து சமயங்களை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக கடந்த வருடம் இந்துக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த வலைத்தளம் முடக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் வேறு ஒரு பேரில் உருவெடுக்க தொடங்கியுள்ளது கறுப்பர் கூட்டம்.

U2brutus என்கிற youtube சேனல், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டுதல் , ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டி, மத அமைதியை குலைத்தல், கொச்சையான வார்த்தைகளை காட்சிப்படுத்தி வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் U2brutus youtube மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனுவில், U2brutus என்ற youtube channel சில சமூக விரோதிகளால் தொடங்கப்பட்டு அதில் இந்துக்களின் மனதை , உணர்வுகளை புண்படுத்தி அதன்மூலம் இந்துக்களை தூண்டிவிடும் நோக்கத்தில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதில் உள்ள வீடியோக்கள் இந்து மதத்தைப்பற்றியும், அவதூறான கருத்துக்களும் , கொச்சையான காட்சிப்படுத்துதல்களும், வசனங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேற்கண்ட வீடியோ link ல் , ஆபாசம் “ஆபாசம் அவ்வளவு ஆபாசம் வேதத்தில் உள்ள ஆபாசங்கள்” என்கின்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

“ச்செய் ச்செய் ….கருமம் கருமம் இவ்வளவு ஆபாசமாக இருக்கு . வேதத்தில் உள்ள ஆபாசங்கள்” என்று எழுதப்பட்ட thumbnail லும் அதில் இடம்பெற்றுள்ளது. வேண்டுமென்றே இந்துக்களின் மனதை புண்படுத்தி அதன் மூலமாக கலவரத்தைத் தூண்டும் நோக்கத்தோடு இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் பேசுகிறார் மைனர் என்கிற நபர் பிரகாஷ் என்ற நபரும் இந்துக்கள் வேதம் என்றாலே அவ்வளவும் ஆபாசம் என்றும்

ஆரியர்கள் ஆபாசமாக எழுதி வைத்துள்ளார்கள் என்றும் வேதத்தில் உள்ள ஆபாசங்களை நாம் விட்டாலும், அந்த ஆபாசங்கள் நம்மை விடவில்லை என்றும் உண்மைக்குப் புறம்பான விஷயங்களை வேண்டுமென்றே அவதூறு பரப்பி அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அது மனதை புண்படுத்தி அதன் மூலம் கலவரத்தை தூண்ட வேண்டும் என்கிற நோக்கத்தோடு பேசியுள்ளார்கள். இது வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கத்திலும், மதரீதியாக பிரிவுகளுக்கு இடையே பகைமையை தூண்டும் வகையிலும் ,

அதன் மூலம் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் ஒரு மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையிலும், அவ்வாறு புண்படுத்தி அதன்மூலம் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், இந்து வழிபாடுகளை கொச்சைப்படுத்தி அதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தும் நோக்கத்திலும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைகளை அவமானப்படுத்தி அதன் மூலமாக வேண்டுமென்றே மத உணர்வுகளை தூண்டி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சினம் ஊக்கமூட்டும் நோக்கத்திலும் ,

மத அமைதியை குலைக்கும் வகையிலும், கொச்சையான காட்சிப்படுத்தல் மூலம் வேண்டுமென்றே மத ரீதியான எண்ணங்களை, நம்பிக்கைகளை அவமானப் படுத்தும் நோக்கத்தில் வெளியிடும் வகையிலும்,
வேண்டுமென்றே அவமானப்படுத்தும் வகையில் வசனங்களை காட்சிப்படுத்தி குறிப்பிட்ட மதத்தினரை அவமானப்படுத்தி அதன்மூலம் அவர்களைத் தூண்டி பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும்
உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற பொய்யான வதந்திகளை மக்களிடையே பரப்பி, அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தூண்டி, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் வகையிலும்
அமைந்துள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட U2brutus என்கிற சமூக வலைதள chennel களை கையாள்பவர்கள், உரிமையாளர், கொச்சையான வீடியோவில் பேசும் மைனர் மற்றும் பிரகாஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க ஆகியோர்
மீது இந்திய தண்டனை சட்டம் 153(A), 295 , 295(A), 296 ,298,499, 504, 505,188 மற்றும் 67 IT ACT உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என இந்து அமைப்புகள் சார்பாக, இராம இரவிக்குமார், ஜெயம் SK கோபி ஆகியோர் சென்னை டிஜிபி அலுவகலத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

குடியரசு தினம் குறித்து பாஜக மீது பொய் பிரச்சாரம்..