தமிழ் மன்னர்களை இதற்கு மேல் யாரும் அசிங்கபடுத்த முடியாது… ஒவ்வொரு தமிழனும் புறக்கணிக்க வேண்டும்..

0
Follow on Google News

சோழ மன்னர்களின் வரலாற்று சம்பவங்களில் தன்னுடைய கற்பனையை கலந்து கல்கி எழுதிய நாவல் பொன்னியின் செல்வன். இந்த நாவலை தழுவி மணிரத்தினம் இயக்கத்தில் அதிக பண செலவில் எடுக்கப்பட்டு தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் பொன்னியின் செல்வன. இந்த படம் தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் என்றும்,

மேலும் பொன்னியின் செல்வன் படம் வெளியான பின்பு ஒவ்வொரு தமிழனையும் தலை நிமிரச் செய்யும் என்று தம்பட்டம் அடித்து, தமிழர்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் இந்த படத்தை வெற்றி அடையச் செய்து விடலாம் என்கின்ற மணிரத்தினம் திட்டத்திற்கு, பொன்னியின் செல்வன் படம் வெளியான முதல் நாளே ஆபத்து வந்து விட்டது.

திரையரங்குகளில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு கடுமையான எதிர் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்று பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏற்கனவே கல்கியின் நாவலை படித்தவர்களுக்கு இந்த படம் சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்களுக்கு இந்த படத்தை பார்த்த பின்பு மணிரத்தினம் மீது ஏற்பட்டுள்ள கோபத்தை பார்க்க முடிகிறது.

அதே போன்று கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இதுவரை படிக்காமல் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தை திரையில் பார்த்தவர்களுக்கு, படத்தின் கதை என்னவென்றே புரியாமல், குழப்பத்திற்கு தீர்வு காண தற்போது பொன்னியின் செல்வன் நாவலைத் தேடி படிக்க தொடங்கியுள்ளனர். வைணவர்களான சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் அனைவரும் சிவன் கோவில் தான் கட்டினார்கள்.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் வந்தியத்தேவன் என யாருமே நெற்றியில் பட்டை அணியாமல் காண்பித்துள்ளது, மணிரத்தினதின் வன்மம் அமபலப்பட்டுள்ளது. சோழ சாம்ராஜ்யத்தை உலகிற்கு காட்டும் வகையில், தஞ்சாவூரை மிக பிரம்மாண்டமாக இந்த படத்தில் மணிரத்தினம் காண்பிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த படத்தின் பின்னணியில் தஞ்சையின் சாயல் கொஞ்சம் கூட வரவில்லை.

மேலும் தமிழ் இலக்கிய வரலாறு தெரிந்த வைரமுத்துவுக்கு இந்த படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்திருந்தால், அனைத்து பாடல்களுக்கும் உயிர் கொடுத்திருப்பார். ஆனால் ஒரு புதுமுக கவிஞரை பொன்னியின் செல்வன் இரண்டு பக்கங்கங்களிலும் பத்து பாடல்களை எழுத வைத்து, பொன்னியின் செல்வன் பாடல் வரிகளில் தமிழை கொலை செய்ய துணை போயுள்ளார் மணிரத்தினம்.

ஏ.ஆர்.ரகுமானின் இசை பொன்னியின் செல்வன் படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏழு கட்டையில் பாட வேண்டிய பொன்னி நதி பாடலை, சொந்த குரலில் பாடி இது என்னடா தமிழுக்கு வந்த சோதனை என கேட்பவர்களை பரிதாப பட வைத்துள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் மன்னர்கள் மண்ணாசை, பெண் ஆசை கொண்டவர்கள் என தவறாக சித்தரித்து பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்தினம் எடுத்துள்ளது, தமிழர்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

தமிழ் மன்னர்களை இதற்கு மேல் யாரும் அசிங்கப்படுத்த முடியாத அளவுக்கு மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார். இது தமிழனை தலைகுனிய வைக்கும் தவிர தமிழனை தலைநிமிர செய்யாது, ஆகையால் ஒவ்வொரு தமிழனும் இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என்கின்ற ஒரு கண்டன குரலும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தமிழர்களின் உணர்வுகளை தூண்டி விளம்பரம் செய்து ஏதோ ஒரு குப்பை படத்தை எடுத்து விட்டு, இதுதான் தமிழனின் பெருமை என்று மணிரத்தினதின் ஏமாற்றும் முயற்சி தோல்வியை தழுவியுள்ளது என்கின்றனர் படம் பார்த்த பெரும்பாலானோர்.